Translate

Friday, 24 August 2012

மண்டேலாவின் பிரதிநிதி உள்ள தென்னாபிரிக்க குழுவை அனுசரணையாளராக ஏற்கமுடியாது – பீரிஸ்

 நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியை உள்ளடக்கிய தென்னாபிரிக்க குழுவை, ஒருபோதும் அனுசரணையாளர்களாக சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா வெளிவவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“கடந்த காலத்தில் புதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவாது.

பிழைகண்டு பிடிப்பதிலேயே இரா.சம்பந்தன் தனது நேரத்தை செலவிடுகிறார்.

தென்னாபிரிக்கா தொடர்பான தவறான கருத்துக்கள் பல உள்ளன.

அண்மையில் கொழும்பு வந்த தென்னாபிரிக்கக் குழுவில் நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியும் உள்ளார்.

இந்தக்குழுவை நாம் ஒருபோதும் அனுசரணையாளர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் எமக்கு ஆர்வமில்லை.

வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி இரா.சம்பந்தன் உரையாற்றினார். உள்ளூர் ஊடகங்களை அவர் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அவர் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார். மறு புறத்தை பார்க்க மறுக்கிறார்.

வடக்கே செல்லும் வெளிநாட்டுத் தூதுக்குழுவினர் திரும்பி வந்து, இரா.சம்பந்தன் சொல்வது போல, வடக்கு இருண்டு போய்க் கிடக்கிறது என்று சொல்லவில்லை.

சிறிலங்கா விவகாரத்தை அனைத்துலக மயப்படுத்துபவர்கள் எந்த நன்மையையும் செய்வதில்லை.

வெளிநாடுகளை நாட விரும்புவதால் உள்நாட்டு செயன்முறை பலமிழந்து போகிறது.

இரா.சம்பந்தனும் வெளிநாடு செல்வதையே தனது தந்திரோபாயமாக வைத்துள்ளார்.

இங்குள்ள பிரச்சினைக்கு தீர்வைக் கொண்டு வரக்கூடிய விருப்பமோ இயலுமையோ வெளிநாடுகளிடம் இல்லை.

அரசியல் தீர்வை தீர்மானிப்பது தாங்கள் அல்ல என்று அவர்கள் திரும்பத் திரும்ப பலமுறை கூறியுள்ளனர்.

எதையுமே இந்த நாட்டில் தான் செய்து முடிக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து எதுவும் வரப்போவதில்லை.

வெளிநாடுகளில் இருந்து தீர்வு வரப்போவதாக வெறும் மனக்கோட்டைகளை கட்டுகின்றனர். ஆனால் எதுவுமே நடக்கப் போவதில்லை. வெளியிலிருந்து ஒரு தீர்வை கொண்டு வர முடியாது.

அனைத்துலக சமூகம் உள்ளே வந்து நிலைமைகளை கட்டுப்படுத்த முடியாது. அதற்கு இடமும் இல்லை.

உள்நாட்டு பொறிமுறைக்கு ஜெனிவா தீர்மானம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.”என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.puthinapp...?20120823106852 

No comments:

Post a Comment