
வடமாகாண தமிழர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்றால், மனித உரிமைகள் தொடர்பான ஜெனிவா மாநாட்டில் விருப்பமின்றியேனும், சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட நேரிடும் என இந்திய அரசாங்கம் அந்நாட்டு அரசு தகவல் அனுப்பியுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன மாத்திரம் ஓரளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக எந்த முன்னேற்றத்தை பெற முடியவில்லை என்பதே இந்தியாவின் கருத்தாக உள்ளது.
எனினும் அடுத்த வருடத்தில் வடமாகாணத்திற்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் என அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருதார்.
இதனை விரைவுபடுத்தி இந்தியாவின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க சிறிலங்கா முயற்சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அடுத்த வரும் ஆகஸ்ட் மாதம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி, இந்தியாவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணியுள்ளது.
No comments:
Post a Comment