
இவ்வாலயம் அண்மையில் கும்பாபிசேகம் செய்யப்பட்டமையால் இங்கு ஆரம்பகாலமாக வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் விக்கிரகத்தை முன் மண்டபத்தில் வழிபாட்டுக்கு வைத்ததுடன் புதிய விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை பண்ணி உள்ளனர்.
இவ்வேளை, இங்கு நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்த விநாயகர் விக்கிரகத்தை தங்களது பௌத்த விகாரைக்கு கொண்டு செல்ல, ஒரு பௌத்த பிக்கு நடவடிக்கை எடுத்த போது இவ்விடயமாக இந்து மக்கள் பாணமை பொலிஸ் மற்றும் அங்கிருந்த இராணுவ முகாம் அதிகாரிகளிடம் இதை தடுக்குமாறு முறையிட்டனர்.
மேலும், இவ்விடயம் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனின் கவனத்துக்கு வந்த போது, அவர் தொலைபேசி மூலம் பாணமை இராணுவ பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு பிக்குவின் இச்செயற்பாட்டை தடுக்குமாறு கோரியிருந்தார்.
இவ்வேளை இப்பௌத்த பிக்கு தொடர்ச்சியாக இந்து மக்களுக்கும், ஆலயத்தினருக்கும் தொந்தரவு கொடுத்துள்ளார். அப்பகுதி மக்கள் விநாயகர் விக்கிரகத்தை பாதுகாக்க முயற்சித்த வேளையிலும், இன்று பௌத்த பிக்கு சிங்கள காடையர்களுடனும் ஊர்காவல் படையினருடனும் வந்து இந்து மக்களை தாக்கி இந்துக்களின் பிள்ளையார் விக்கிரகத்தை ஆலயத்துள் புகுந்து எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தினை மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும், பிக்குவின் இச்செயற்பாட்டுக்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார்.
இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பாதிக்கும் வகையில் நடாத்தப்படும் செயற்றிட்டங்களை சுட்டிக்காட்டி, இந்துக்களின் மத உரிமையை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், மதவிவகார அமைச்சரும், பிரதமருமான தி.மு. ஜயரத்னவை அவசரமாக சந்திப்பதற்காக சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment