போர் முடிவடைந்துள்ள போதிலும் இராணுவத்தினர் தொடர்ந்தும் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பாதுகாப்புச்செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்தும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
30 ஆண்டு கால யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் நிலவி வரும் சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்த படையினர் தொடர்ச்சியாக முயற்சி மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவுக்கு வெளியே தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சியோர் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்குள்ளும் இவ்வாறு ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபடக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொடர்ச்சியாக முயற்சிக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment