Translate

Monday 6 August 2012

சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி


சீனாவில் தமிழ் மொழியை வளர்க்க பாடுபடும் சீனப் பெண்ம​ணி

cina-penசீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் இவர். பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். என்னமாய் தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள்.அவர் மேலும் தெரிவிக்கையில் நான் தமிழ்மொழியை சீனா முழுவதும் பரப்புவதையே இலட்சியமாக கொண்டுள்ளேன். அதற்காக சீன தமிழ் தொலைக்காட்சிகள். வானொலிகள். ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதில் முழுக்க சீனர்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள்.

ஆயிரக்கணக்கான சீனர்கள் தமிழ்நாட்டில் தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அதிலே தேர்ச்சி பெற்றவர்களை தொலைக்காட்சி. வானொலிகள் பணிக்கு அமர்த்தி இருக்கிறோம்.
அதேபோல் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு தமிழ் திரைப்படங்கள் சின்னத்திரை சினிமா பாடல்களுக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுத்து இதை ரசிக்கிறார்களோ அதேபோல் தற்போது சீனாவிலும் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
வாழ்க தமிழ்மொழி…

 
 முன்செல்ல

No comments:

Post a Comment