Translate

Thursday 16 August 2012

“ஈழத்தமிழர்கள் என்றால் விடுதலைப் புலிகள்” – இதுவே வடக்கின் நினைப்பு என்கிறார் பாஸ்வான்


ஈழத்தமிழர் என்றால், விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே, வட மாநிலங்களில் உள்ளவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் என்று லோக்ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நடந்த ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர்,

“ஈழத் தமிழர்களின் பிரச்சினையை வட மாநிலத்தவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. ஈழத் தமிழர்கள் என்றால் விடுதலைப் புலிகள், பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர். எனவே, ஈழத்தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வட மாநிலங்கள் முழுவதும் டெசோ அமைப்பு கூட்டங்களை, நடத்த வேண்டும்.
சிறிலங்காவில் தமிழர்கள் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே வசித்து வருகின்றனர். அவர்கள் அந்த நாட்டின் உண்மையான குடி மக்கள். அவர்களை அழிக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. ஈழத் தமிழர்களின் பிரச்சினை என்பது தமிழ்நாட்டு பிரச்னை மட்டுமல்ல. காஷ்மீர் பிரச்னை வேறு, ஈழத்தமிழர்கள் பிரச்சினை வேறு. ஈழப் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவோம்.” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment