கொழும்பு: இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தலைமையில் அடுத்த வாரம் இந்தியா வரவிருந்த இலங்கைக் குழுவினர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச, இந்தியாவுடன் பனிப்போர் எதுவும் இல்லை. குளிர் காலத்து காதலைப் போல இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த பின்னர் இருநாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக பல மாதங்களாக இலங்கை அரசுத் தரப்பு இந்தியாவிடம் கெஞ்சி வந்தது. மேலும் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை இந்தியாவிடம் கொடுக்க இருப்பதாகவும் வாக்குறுதி கொடுத்தது இலங்கை.
ஆனாலும் இது தொடர்பாக இந்தியா அந்த பதிலும் தராமல் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென இந்தியா சார்பில் கிரீன் சிக்னல் இலங்கைக்குக் கொடுக்கப்பட்டு ஆகஸ்ட் 24-ந் தேதி பசில் ராஜபக்ச்ச குழுவை சந்திக்க ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. ஈழத் தமிழர் பிரச்சனையுடன் சீனாவுடனான இலங்கையின் நெருக்கம், வடக்கு கிழக்கில் சீனாவின் இருப்பு உள்ளிட்ட சீனாவுக்கு இலங்கை காட்டி வரும் சலுகைகள் ஆகியவை குறித்த விவரங்களுடன் இந்தியாவுக்கு வருமாறும் இலங்கைக்கு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சம்பூரில் இந்தியா அமைக்க இருந்த அனல்மின் திட்டத்துக்கு பதில் பாகிஸ்தானின் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து விரிவான விளக்கம் இந்திய தரப்பில் கோரப்பட்டது. தற்கு இலங்கை தரப்பில் சாதகமான பதில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் பசில் ராஜபக்ச தலைமையிலான குழுவை சந்திக்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் வரும் 24-ந் தேதி டெல்லிக்கு இலங்கைக் குழு வராது என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment