Translate

Thursday, 16 August 2012

2012 செப்ரெம்பர் 22ம் நாள் ஐ.நாவை நோக்கி அணிதிரள்வோம்…!!!

ஈழத் தமிழர் மண்ணில் வாழ்வுரிமைக்கான குரல்
பேரெழுச்சி ஒன்றுகூடல் 2012 செப்ரெம்பர் 22ம் நாள்
சனிக்கிழமை நேரம் 14.00 – 18.30 மணி.
ஈகைப் பேரொளி முருகதாஸ் திடல், ஐ.நா வளாகம் ஜெனிவா.

“நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக, அரச பயங்கரவாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தீர்க்கமான, நியாயபூர்வமான அரசியல் குறிக்கோளைக் கொண்டது. ஐநா சாசனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுய நிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.”

- தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் -

** – ஐநா நிபுணர் குழு அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்ட குற்றாவாளிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதி மன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

** – சிங்கள அரசின் சிறைக் கூடங்கள், தடுப்பு முகாம்கள், இராணுவத்தின் இரகசிய வதை முகாம்கள் ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும்.
Posted Image 
** – வடக்கு கிழக்கை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.


** – இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கைத் தமிழர் தாயகமாகவும், அவர்களுடைய தேசிய உறைவிடம், தன்னாட்சி இருப்பிடமாகச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.

** – ஈழத் தமிழர் தாயகத்தில் நிறுவப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். இராணுவ முகாம்களுக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் உரித்தாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

** – ஈழத் தமிழர் தம் மொழி, மத, கலாசார, பண்பாட்டு ஆதாரங்களைச் சிதைக்கும் சிங்கள அரசின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

** – ஈழத் தமிழர்களின் பேச்சு சுதந்திரம், நடமாட்ட சுதந்திரம், வாழ்வுரிமை உட்பட்ட அனைத்து மனித உரிமைகளும் ஐனநாயக விழுமியங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

** – தமிழீழ மக்களின் அரசியல் வாழ்வைத் தெரிவு செய்யும் உரிமையை முன்னெடுக்கும் நோக்கில் ஈழத் தமிழர்களின் தாயகத்தில் ஐநா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

No comments:

Post a Comment