Translate

Thursday, 16 August 2012

முல்லைத்தீவு மாவட்ட த்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை.


முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடுக் கிராமத்தில் பெரியமுறிப்புக் குளத்திற்கு அண்மித்த பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுடன் சிவன் கோவில் அர்ச்சகரையும் படையினர் மிரட்டியிருக்கின்றனர்.

பெரியமுறிப்புக்குளத்திற்கு அருகாமையில் உள்ள அரச மரத்தின் கீழ் உள்ள சிவன் கோவிலில் மக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் போர் மூலம் குறித்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அரச மரத்தின் கீழ் சிறிய பௌத்த கோவில் அமைத்து அதில் புத்தரின் சிலையும் வைக்கப்பட்டிருக்கின்றது.

இதனை அடுத்து குறித்த சிவன் கோவிலின் அர்ச்சகரை அணுகிய படையினர் புத்தவிகாரை விவகாரத்தினை யார் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியது? என்று கேட்டு மிரட்டியதுடன், குறித்த பகுதியில் சிவன் கோவில் தான் மிக நீண்டகாலமாக இருந்தது என்பதற்கு என்ன? ஆதாரம் உள்ளது என்பதை வெளிப்படுத்துமாறும் அச்சுறுத்தியிருப்பதாகத் தெரியவருகின்றது.

பண்டாரவன்னியன் காலத்திற்கு முற்பட்ட காலத்தில் இருந்தே குறித்த சிவன் கோவில் அந்தப் பகுதியில் இருந்து வந்ததாக மூத்தோர் ஊடாக தாம் அறிந்திருந்ததாக கற்சிலைமடுக் கிராமத்தின் வயோதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
http://thaaitamil.com/?p=28780 
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

http://thaaitamil.com/

No comments:

Post a Comment