சீனா மீனவர்கள் என கைது செய்யபட்டவர்கள் யார்? – அம்பலமாகும் உண்மை.
கடந்த வாரம் சிறிலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 சீன மீனவர்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சீன மீனவர்கள் எனக் கூறப்படுபவர்கள் 32 பேர் சிறிலங்கா கடற் படையினரால் கைது செய்யப்பட்டுனர்.
அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட இவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு சீனா கோரிக்கை விடுத்திருந்தது.
இதன் பின்னணியில் பல மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது கைது செய்யப்பட்ட அன்றையதினமே மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சீன ஊடகமான சிங்குவா தெரிவித்திருந்திருந்து.
ஆனால் குறித்த மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதாக சிறிலங்கா அரசு தெரிவித்தது.
இந்த கைது விவகாரம் தொடர்பில் சீன தூதரகத்திற்கும் சிறிலங்கா அரசிற்கும் இழுபறிகள் தொடர்ந்த நிலையில் நேற்று முன்தினம் அனைத்து மீனவர்கள் சீன தூதரதகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இழுபறிக்கு காரணம் அவர்கள் உண்மையில் மீனவர்கள் அல்ல என்பதே மாறாக அவர்கள் கடல் அகழ்வு ஆய்வுகளில் ஈடுபடும் பணியாளர்கள் என தெரிய வந்துள்ளது.
கடல் அகழ்வு ஆய்வுகளில் பணிகளில் ஈடுபட சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாக சீனாவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அனுமதிகள் தொடர்பில் கீழ் நிலையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிசாருக்கு தகவல்கள் தெரியாததால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் எனக் கூறப்பட்ட சீன கடலாய்வுப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட கடல்பகுதியிலேயே இன்றுதான் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சீன நாட்டவர்கள் கடல் அகழ்வு ஆய்வுகளில் ஈடுபட்டவர்கள் என சிறிலங்கா மீன்படி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
http://thaaitamil.com/?p=28352

No comments:
Post a Comment