Translate

Friday 10 August 2012

தடுமாற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை! தடுமாற்றம் கனடா உதயனுக்குத்தான்!-நக்கீரன்


தடுமாற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை! தடுமாற்றம் கனடா உதயனுக்குத்தான்!-நக்கீரன்

கனடா உதயன் “தெளிவற்ற முடிவுகளோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடுமாறுகின்றதா?” (03-8-2012)  என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் தீட்டியிருக்கிறது. அதற்கான பதில் கீழே தரப்படுகிறது.
தடுமாற்றம் ததேகூ க்கு இல்லை.  தடுமாற்றம் கனடா உதயனுக்குத்தான்.  இப்போது தலையங்கத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

(1) இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்று மக்களின் அங்கீகாரத்தோடு அங்கு செயற்படும் ஒரேயொரு அமைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும். ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமிழகத்தில் நமது அரசியல் பிரச்சனைகள் மீது ஆர்வம் கொண்டவர்களும் இன்னமும் ஏற்றுக் கொண்டதும் நம்பிக்கை வைத்துள்ளதுமான அரசியல் அமைப்பும் இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும்.
ஆனால் விடுதலைப் புலிகளை அழிப்பதுதான் உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்று என்று இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து முடிவுகளை எடுத்ததன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இந்த இரண்டு அரசாங்கங்களும் அணைப்பது போன்று வெளியே காட்டிக் கொண்டாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது விடுதலைப் புலிகள் நடந்து வந்த பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றது என்றும் விடுதலைப் புலிகளின் பெயரை அடிக்கடி உச்சரித்த வண்ணம் அரசியல் செய்யும் இயக்கம் என்றும் கணித்து வைக்கத் தொடங்கின.
பதில் – இலங்கை அப்படி நினைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந்தியா அப்படியில்லை. அய்.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி பிரதமர் மன்மோகன் சிங் சிறீலங்காவின் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சேக்கு எழுதிய கடிதத்தில்  இந்தியா, சிறீலங்காவோடு பங்காளியாக இணைந்து   “எல்லா வித சிக்கல்களுக்கும் குறிப்பாக சிறீலங்காவில் வாழும் தமிழ் சமூகத்தின் குறைபாடுகளை புரிந்துணர்வோடும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும்” செயலாற்ற விரும்புகிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.  தமிழ் சமூகத்துக்கு 13 ஆவது சட்ட திருத்தத்திற்கு மேலாக ஒரு பொருள்பொதிந்த அதிகாரப் பகிர்வுப் பொதியொன்றை வழங்குவதன் மூலமே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டுவது சாத்தியமாகும்.   அதிகாரப் பகிர்வு மூலமாகவே பல சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும் என்பது எமது நம்பிக்கையாகும்.  அப்படியான ஒரு சூழலை உருவாக்குவதன் மூலமே சிறீலங்காவில் வாழும் குடிமக்கள் அனைவரும் அவர்களது இனம் எதுவாயிருப்பினும் நீதி,  கண்ணியம்,  சமத்துவம் மற்றும் தன்மானம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.
Singh also expressed India’s wish for a continuing partnership with Sri Lanka to achieve a “political solution that will address all outstanding issues, in particular the grievances of the Tamil community in Sri Lanka, in a spirit of understanding and mutual accommodation”. “It is our conviction that a meaningful devolution package, building upon the 13th Amendment, would lead towards a lasting political settlement on many of these issues and create conditions in which all citizens of Sri Lanka, irrespective of their ethnicity, can find justice, dignity, equality and self-respect,” Singh said. (http://articles.timesofindia.indiatimes.com/2012-03-25/india/31236525_1_g-l-peiris-rajapaksa-sri-lanka)
(2) விடுதலைப் புலிகளை அழித்ததன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழர் பிரதேசங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிகளை ஈட்டியதால் தங்கள் விருப்பமின்மையை அதன் மீது உடனடியாகக் காட்ட முடியாத நிலையில் இலங்கையும் இந்தியாவும் சற்று “அடக்கி வாசிக்கத்” தொடங்கின. ஆனால் அவர்கள் எடுத்த தீர்மானம் என்னவென்றால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் அமைப்பை சிறிது சிறிதாக தமிழர்களுக்கு அவசியம் அற்ற அரசியல் அமைப்பாக காட்சிப்படுத்துவது என்பதுதான்.
பதில் -  சிறீலங்காவைப் பொறுத்தளவில் இந்த விமரிசனம் சரி. ஆனால் இந்தியாவை சிறீலங்காவோடு ஒரே துலாக்கோலில் வைத்து நிறுப்பது சரியல்ல. அப்படியான எண்ணம் இந்தியாவுக்கு இருக்குமேயானால் இந்தியா ததேகூ  தொடர்ச்சியாகச் சந்தித்து கருத்துப் பரிமாற்ங்கள் செய்வதை எப்போதோ நிறுத்தி இருக்கும்.
(3) இதன்காரணமாகத்தான் அரசாங்கத்தோடு மறைமுகமாக நட்பைக் கொண்டுள்ள ஆனந்தசங்கரி முன்வரிசைக்கு கொண்டுவருவதன் மூலம் தமிழரசுக்கட்சியையும் அவரையும் அவரோடு இணைந்தவர்களையும் தமிழர் அரசியலில் உட்கொண்டு வரும் எண்ணமும் இலங்கை இந்திய அரசாங்கங்களின் மனங்களில் உதித்த ஒரு யோசனைதான். ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றாலும் தமிழரசுக் கட்சியென்றாலும் அவற்றுள் முன்வரிசையில் திருவாளர்கள் இரா சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் அமர்ந்திருப்பதையே அவர்களும் தமிழ் மக்களும் விரும்புவார்கள் என்ற காரணத்தால் மறைமுகமாக ஒரு திட்டத்தை இலங்கையும் இந்தியாவும் தீட்டியிருக்க வேண்டும்.
அதுதான் ஈழத்தமிழர்களின் தலைமையை தமிழரசுக் கட்சி என்ற தலைமையிடம் கையளிப்பதுதான். இதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றியும் அவர்கள் நடத்திய வீரமிகு விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் தமிழ் மக்களோ அவர்களின் அரசியல் தலைமைகளோ மனதால் கூட எண்ணக் கூடாது என்பதில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் கண்டிப்பாக இருந்து வந்திருக்கின்றன.
பதில் – இந்த முடிவு வெறும் ஊகத்தின் அடிபடையில் எட்டப்பட்டுள்ளது.  இலங்கை அரசு ஈழத்தமிழர்களின் தலைமையை தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைக்க திட்டம் தீட்டியதா? இது நல்ல நகைச்சுவை. ஈழத்தமிழர்களின் தலைமை தமிழரசுக் கட்சியிடம் தான் உள்ளது. மக்கள் அதற்கான ஆணை கொடுத்துள்ளார்கள். ஆனந்தசங்கரியை  ததேகூ இல் சேர்த்துக் கொள்ள எடுக்கப்பட்ட முடிவுக்கும் இலங்கை இந்திய அரசுகளுக்கும் தொடர்பே இல்லை. அது  ததேகூ எடுத்த முடிவு. அது சரி “விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றியும் அவர்கள் நடத்திய வீரமிகு விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும்

No comments:

Post a Comment