Translate

Thursday, 16 August 2012

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது: யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி
கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வியெழுப்பட்டுள்ளது.



தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்குக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

No comments:

Post a Comment