நெடுந்தீவில் கடற்படையினர் சுவீகரித்து வைத்திருக்கும் சனசமூக நிலையத்தினை விடுவிக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெடுந்தீவு மாலித்தீவில் பல லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தை கடற்படையினர் பல வருடங்களாகச் சுவீகரித்து வைத்துள்ளனர்.
மேற்படி கட்டிடத்தை கடற்படையினர் சுவீகரித்து வைத்திருப்பதால் பெருமளவான அரிய நூல்கள் பாதுகாக்க உரிய இடம் இன்றி அழிவடைந்து வருகின்றன.
நெடுந்தீவிலுள்ள நூலகங்களிலேயே மிகவும் விஸ்தாரமான கட்டிட அமைப்பையும் சிறுவர் பகுதி வாசகர் பகுதி விளையாட்டு திடல் என பாரிய அளவில் அமைக்கப்பட்ட ஒரு நூலகமும் இதனுள்ளேயே அமைந்துள்ளது.
எனவே கடற்படையினர் இக்கட்டிடத்தை விட்டு மிகவிரைவாக வெளியே வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment