Translate

Saturday, 4 August 2012

சுயநலக்காரர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது ,

சுயநலக்காரர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது ,
அவர்கள் நம் சிறகுகளை எரியவிட்டு அதில் குளிர்காய ஆசைப்படுவார்கள் ; 
 
பொறாமைக்காரர்களுடம் பொருந்தி விடக்கூடாது , 
அவர்கள் நம் வெற்றிகளில் வயிறெரிவார்கள் ; 


நேர்மையற்றவர்களோடு இணைந்து விடக் கூடாது ,
அவர்கள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுவார்கள் !!

எனவே நண்பர்கள் சேர்ப்பதில் நாம் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது !!!

" ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்”
ஒருவனது குணநலன்களைப் பலமுறை பல வழிகளில் ஆராய்ந்து கொள்ளாதவனின் நட்பு, முடிவில் தான் சாவதற்கு ஏதுவாகிய துன்பத்தைக் கொடுக்குமாம் !

No comments:

Post a Comment