ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்பட உள்ள தம்புள்ள புனித பூமியின் நிர்மாணிப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதற்காக கண்டலம சந்தியில் உள்ள வீடுகள் பெக்கோ இயந்திரங்கள் மூலம் உடைக்கப்பட்டு வருகின்றன. வீட்டு உரிமையாளர்களுக்கு மாற்று வீடுகளை வழங்காது, வீடுகளை உடைத்து, காணிகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
அத்துடன் இந்தப்பிரதேசத்தில் நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லீம் மக்களால் பேணப்பட்டு வரும் முஸ்லீம் பள்ளிவாசலும் நிரந்தரமாக அகற்றப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் ஏறக்குறைய பள்ளியை அகற்றும் முடிவுக்கு ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை இந்த பிரதேசத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் ஒரு பதற்றமான சூழல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது. வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை.
தம்புள்ள நகர முதல்வர் மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவான பிரபல அரசியல்வாதிகள், பிரதேச அரசியல்வாதிகள் அனைவரும் ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு கண்டலம பிரதேசத்திற்கு செல்ல வேண்டாம் எனவும் செய்திகளை சேரிக்க வேண்டாம் எனவும் கோரி வருகின்றனர்.
No comments:
Post a Comment