கொழும்பில் நடைபெறுகின்ற இராணுவ செயலமர்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விசேட நடன நிகழ்வு இன்று காண்பிக்கப்படவுள்ளது.
இதில் கோகுலன் ௭ன்ற புனர்வாழ்வு பெற்ற போராளி பாடலொன்றை பாடவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இராணுவச் செயலமர்வில் இரண்டாவது நாள் இன்று கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது. காலையில் புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் புனர்வாழ்வு படிமுறைகள் தொடர்பாக அனுபவங்களை இலங்கை இராணுவம் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதென்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment