Translate

Friday 3 August 2012

முதுமையிடமிருந்து தப்பித்த இரகசியத்தை சொல்கிறார் நதியா

நடிகை நதியா எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர். பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமான நதியா, பத்தாண்டுகாலம் தமிழ் திரையுலகின் தேவதையாய் வலம்வந்தார். நதியா எதை அணிந்தாலும் அது பேஷன் ஆனது. நதியா கொண்டை, வளையல், தோடு என அனைத்தும் சந்தையில் விற்றுத்தீர்ந்தது. இத்தனைக்கும் கவர்ச்சிகரமான உடலழகை வெளிப்படுத்துகிற வேடங்கள் எதையுமே நதியா அண்டவிடவே இல்லை.
நதியா தன் முகத்தை, தன் ஒல்லியான உடலமைப்பை நம்பினார். வெற்றிகரமான நாயகியாக வலம் வந்த நேரத்திலேயே திருமணம் செய்து கொண்டு ஒதுங்கியவர் பல ஆண்டுகள் கழித்து கதாநாயகனின் அம்மாவாக வசீகரமாகத் தோன்றினார்.
இன்றைக்கும் இளமையாக இருக்கக் காரணம் நதியா மேற்கொள்ளும் உடற்பயிற்சிதானாம். உடம்பில் கொஞ்சம் கொழுப்பு சேர்வது போல தோன்றினாலும் அதற்கான கலோரிகளை எரிக்க உடற்பயிற்சி செய்வேன் என்கிறார். சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். காலையில் வாக்கிங், ஜிம்மில் வெயிட் ட்ரெயினிங் செய்கிறேன்.

அதோட வீட்டு வேலைகளை நானே செய்துகொள்கிறேன். என் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறேன் என்கிறார் நதியா.
நமக்கு உடம்பு சரியாக இருக்கிறது என்பதை பசியும், தூக்கமும் உணர்த்திவிடும். எனவே அதை சரியாக வைத்துக்கொள்ளவேண்டும். உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு சாப்பிட்டால் போதும். தென்னிந்திய உணவோ, மும்பை உணவே எதுவுமே உடலுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு சாப்பிடுவேன். கலோரிகளை எரிக்கும் அளவிற்கு வேலை செய்வேன்.
டென்னிஸ் விளையாடுவதும் ஜிம்முக்கு செல்வதும் எனக்கு பிடித்தமான ஒன்று அதுதான் என் ஆரோக்கியமான அழகின் ரகசியமும் கூட என்று கூறியுள்ளார்.
முக அழகிற்கு என்று எதையும் ஸ்பெசலாக செய்வதில்லை. அடிக்கடி நல்ல தண்ணீரில் முகம் கழுவுவேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். குளிர்ச்சியான எண்ணெயால் மசாஜ் செய்வேன். அதைவிட எப்போதும் சிரித்த முகத்தோடு இருந்தாலே முகத்தில் சுருக்கம் வர வாய்ப்பே இல்லை.
பெண்கள் தினசரி தங்களை கவனிக்க அரைமணிநேரம் ஒதுக்குங்கள். உடற்பயிற்சி, தியானம் செய்யலாம். மனதை டென்சன் இல்லாம ரிலாக்ஸ் ஆக வைத்துக்கொள்ளுங்கள் முதுமை என்பது எட்டிப்பார்க்காது என்கிறார் நதியா.

No comments:

Post a Comment