அன்பான கிழக்கு வாழ் தமிழ்மக்களே!
விடுதலைக்காக பல தளபதிகளும் போராளிகளும் மாவீரர்களாக வீழ்ந்த கிழக்குமண்ணில் தமிழ் தேசிய எழுச்சி இன்னும் அடங்கவில்லை.என்பதை நடக்கப்போகும் மாகாணசபை தேர்தலில் எழுச்சியுடன் நிருபித்து காட்டவேண்டியது கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று கடமையாகியுள்ளது.
தமிழ் தேசிய எழுச்சின் நிழலில் பிரபலியம் பெற்று மாபெரும் தேசியப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த கருணா, மற்றும் இவருடன் சிங்களத்தின் குகைக்குள் புகுந்துகொண்டு தமிழ்மக்களின் மேம்பாடு குறித்து கொக்கரிக்கும் பிள்ளையான் போன்றவர்களுடன் இணைந்து செயற்படுபவர்களை தமிழ் அரசியல் அரங்கிலிருந்து முற்றாக அகற்றுவதற்கு வரும் மாகாணசபை தேர்தலை தமிழ் பேசும் மக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
எம் இனத்தை காட்டிக் கொடுத்த இவ்வாறான இனத்துரோகிளை தூக்கியெறியுங்கள்.!
நயவஞ்சகர்களான இவர்கள் எமது இனத்தின் சாபக்கேடுகள்!
அன்பான கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களே! தமிழ் தேசியத்தையும் காத்து தமிழ் மக்களின் உரிமைப்போரட்டத்திற்கும் வலுச்சேர்ப்பதற்கு உங்கள் வாக்குளை பயன் படுத்துங்கள்.!
தன்மானம் மிக்கவர்கள் தமிழர்கள் என்பதை சிங்களத்துக்கும் துரோகிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.!
நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் சிங்கள தேசத்தின் பேரினவாதத்திற்கு கொடுக்கின்ற பலமான அடியாக அமைவதோடு சிங்கள பேரினவாதத்தின் அடிவருடிகளான கருணா, பிள்ளையான் குழுவினர் அடியோடு அரசியலில் அழிந்து போவதற்கும் பயன்படுத்துங்கள். மௌனிக்கப்பட்ட தேசியவிடுதலைப் போராட்டத்தின் சமகால அரசியல் வெற்றிகாக இத்தேர்தலை பயன்படுத்துங்கள் எனவும் டென்மார்க் வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக தமிழர் நடுவம் டென்மார்க் உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அறம் வெல்லும்! ஒன்று படுவோம்! உரிமையைக்காப்போம்!
தமிழர் நடுவம் டென்மார்க்
No comments:
Post a Comment