Translate

Monday 3 September 2012

செப்ரெம்பர் 20 : ரொசோ தீர்மானத்தினை கையளிக்க நியூ யோர்க் பயணமாகவுள்ள தி.மு.க !


தமிழகத்தின் தி.மு.கட்சித் தலைவர் மு.கருணாநிதியினை ‘தமிழ் ஈழ தலைவரே’ என வர்ணித்து வெளியிட்டப்பட்ட பதாதை தமிழீழ உணர்வாளர்கள் மத்தியில் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் அவர்களைச் சந்திக்க மு.ஸ்ராலின் தலைமையிலான குழுவொன்று நியூ யோர்க் செல்லவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

ஈழத்தமிழர்களை மையப்படுத்தி சமீபத்தில் நடந்து முடிந்த ரொசோ மாநாட்டின் தீர்மானங்களை கையளிக்கும் நோக்கில் மு.ஸ்ராலின் ரீ.ஆர்.பாலு மற்றும் சுப.வீரபாண்டியன் ஆடுகியோர்க் நியூ யோர்க் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் 20ம் திகதி அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ள இவர்கள் இந்தியா திரும்பும் வழியில் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைச் சபைக்கும் விஜயம் செய்து ரொசோ மாநாட்டுத் தீர்மானத்தின் நகல்களை அங்கும் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment