Translate

Friday 7 September 2012

கிழக்கு மாகாணத் தேர்தல் தமிழருக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்

essayஅரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசியல் தீர்வு பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் மக்கள் ஓர் அணியில் நின்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது நடை பெறப் போகும் பேச்சுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமையுமெனக் கல்விமான்கள் கூறுகின்றார்கள்.
சனிக்கிழமை 8 ஆம் திகதி நடைபெற இருக்கும் கிழக்கு  மாகாணத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளபடியால், அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் ஓர் அணியின் கீழ் ஒன்று திரண்டு, அரசியல் அடிமைகளாக்கப் பட்டுள்ள எமது இனத்தின் விடுதலைக்காக உழைக்க முன்வர வேண்டும். 
 
இந்த நேரத்தில் கடந்த 64 வருடங்களாகத் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை, கொலைகளை, கற்பழிப்புக்களை, சிறச்சாலை கைதிகளின் கொலைகளை, காணா மல் போனோர்களை, இளம் விதவைகளை, அனாதைக் குழந்தைகளை, ஊனமுற்றவர்களை, சிறையில் சித்திரவதை அனுபவிப்பவர்களைப் பற்றியும் சற்றுச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். 
 
விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இந்தத் தேர்தலின் முடிவுகளை இந்தியா, உட்பட உலகின் பல நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளையும் லட்சக் கணக்கான தமிழ் மக்களையும் அழித்து கொழும்பு அரசு போரில் வெற்றியீட்டி 3 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் தமிழ் மக்களுக் கென ஓர் அரசியல் தீர்வு முன்வைக் கப்படவில்லை. மக்களின் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. மீள் குடியமர்வு இன்னும் ஆமை வேகத்திலேயே போய்க் கொண்டி ருக்கிறது. 160 பாடசாலைகள் இன்று வரையும் மூடப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக 20 ஆண்டுகளுக்கு மேல் இந்தியா விலும் வெளிநாடுகளிலும் வாழ் கிறார்கள். உள்ளூரில் இன்னும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 888 பேர் மீள்குடியமர்த்தப் படவில்லை என புள்ளி விவரங்கள் காண்பிக் கின்றன. 
 
தமிழ், முஸ்லிம் மக்கள் மரபு வழியாக வாழ்ந்து வந்த பிரதேசங்கள் இன்று இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றன. சிங்களக் குடியேற் றங்களும் பௌத்த விகாரைகளும், அரச மரங்களும் பல இடங்களையும் ஆக்கிரமித்து வருகின்றன. தமிழ் மக்களின் குடிசன விகிதாசாரம் 40 வீதம் குறைந்துள்ளன. 
 
யாழ்ப்பாணத்தில் 7 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அடக்குவதற்கு 18 இராணுவ முகாம்கள் உள்ளன. உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப் பிட்ட காணிகளில் வாழ்ந்த மக்கள் இருக்க இடமின்றி தறப்பாள்களின் கீழ் வாழ்வதாக முறையிடுகிறார்கள். இராணுவ பிரசன்னத்தினால் பொதுமக்கள் இரவில் தமது வீடுகளில் நித்திரை செய்யவும் பயப்படுவதாக கூறுகிறார்கள். 
 
இந்த நிலையில் அரசுக்கு துதிபாடும் அமைச்சர்களாலும் நாடாளுமன்ற பிரதிநிதிகளாலும், முதலமைச்சர்களினாலும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடியாது. வடக்கு, கிழக்கின் மாநில ஆட்சி வரப்போகும் மாகாண சபைத் தேர்தலிலும், அதில் வெற்றி பெறும் அமைச்சர்களினது உறுப்பினர்களினதும் கைகளில்தான் தங்கியுள்ளது. 
 
கடந்த பொதுத் தேர்தலில் வடகிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் அளித்த ஏகோபித்த ஆதரவு காரணமாகவே இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வுகாணும் நோக்கத்துடன் இலங்கை அரசும் ஐ.நா. சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த முன்வருகின்றன. இந்தப் பேச்சு வார்த்தைகள் தடம் புரண்டு போகாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்த வேண்டுமென தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க வேண்டு கோள்களை விடுத்து வருகின்றார். 
 
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் தீர்வு பேச்சு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலையில் மக்கள் ஓர் அணியில் நின்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு வாக்களிப்பது நடை பெறப் போகும் பேச்சுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமையுமெனக் கல்விமான்கள் கூறுகின்றார்கள். ஆகவே இந்தத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பது பெரும் பாக்கியமாகும். எனவே இந்த வாய்ப்பை தமிழ் பேசும் மக்கள் தமக்குக் கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் என எண்ணி பொறுப் புணர்ச்சியுடனும் தன்மானத்து டனும் வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை பலப் படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். 
 
கடந்த பல ஆண்டுகளாக இறந்தவர்களின் ஆத்மாக்களும் மேலும் தமிழ் மக்கள் சிந்திய இரத்தமும் கண்ணீரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங் களைப் பலப்படுத்த வேண்டும். தமிழரசுக் கட்சியும் அதனுடன் இணைந்த ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எவ் கூட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று வரையும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத் துடனும் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக நேர்மையான முறையில் இனப்பிரச்சினைக்கான ஓர் சரியான தீர்வு கிடைக்கும் வரையில் ஒன்றுபட்டு செயற்பட்டு வருவது யாவரும் அறிந்த உண்மையாகும். 
 
கடந்த 64 ஆண்டுகளாக தமிழ் பேசும் மக்களுக்காக தமது உயிரையும் தியாகம் செய்த தலைமைத்துவம் ஒன்று உண்டென் றால் அது தான் தந்தை செல்வநாய கத்தினால் உருவாக்கப்பட்ட தமிழ் அரசுக் கட்சியாகும். சலுகைக்காக, அமைச்சர் பதவிக்காக, பணத்துக்காக இன்று வரையும் விலைபோகாத தூய்மையான கட்சிதான் இலங்கை தமிழரசுக் கட்சியும் அதனுடன் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமாகும். 
 
4050 வருடங்களுக்கு மேற்பட்ட அரசியல் ஞானம் பெற்ற தலைவர் இரா.சம்பந்தனையும் செயலாளர் நாயகம் மாவை சேனாதிரா ஜாவையும் தன்னகத்தே கொண் டுள்ள பெருமை இந்தக் கட்சிக்குரிய சிறப்பு. இன்று உலகத்தில் தமிழ் மொழியும் தமிழர்களும் இல்லாத நாடுகள் இல்லை. 7 கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின் றார்கள். இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனத்தினர். அவர்கள் பிறந்த மண்ணில் தம்மைத் தாமே ஆளும் உரிமை அவர்களுக்குண்டு. தாம் விரும்பிய உள்ளூர் ஆட்சித் தலைவர்களையும், மாகாண சபைத் தலைவர்களையும் நாடாளுமன்றத் தலைவர்களையும் தெரிவு செய்தபடி, ஐக்கிய இலங்கைக்குள் சமத்து வத்துடன் வாழும் சகல உரிமைகளும் அவர்களின் பிறப்புரிமைகளாகும். 
 
கடந்த 64 ஆண்டுகளாக முன் னெடுக்கப்பட்ட அகிம்சை போராட்டங் களும் ஆயுதப் போராட்டங்களும் தமிழர் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, தேசியம் ஆகிய இந்த நான்கையும் அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட வையாகும். தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு வளர்த்தெடுக் கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு இந்த இலட்சியங்களில் இருந்து நழுவியதே கிடையாது.
 
ஒரு தேசத்தில் அரசியல் உரிமைகள் அற்ற நிலையில் வாழும் மக்களுக்கு வெறும் சலுகைகளையும் அபிவிருத்திகளையும் மட்டும் வழங்கினால் அவர்களின் மனத்து யரத்தை, புண்களை உயிர்களைப் பிரிந்த துயரத்தை, விதவை வாழ்வின் துயர தர்க்கத்தை மாற்றி அவர்களுக்கு  நல்வாழ்வு அளிக்க முடியுமா?
 
தந்தை செல்வா இலங்கை அரசுடனும் கைச்சாத்திட்ட பல ஒப்பந்தங்கள் இந்திய அரசு மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது சரத்து இவைகளின் அடிப்படையில் தற் போது நடைபெறும் பேச்சுக்கள் மூலமும் ஐக்கிய இலங்கைக்குள் மாகாண சுய ஆட்சி (சமஷ்டி ஆட்சி) கிடைக்க வேண்டும். 
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றிபெறச் செய்வதன் மூலம் இலங்கை அரசுடனான பேச்சு வெற்றி பெற்று பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்குகிழக்கு மாகாண சுய ஆட்சியுடன் சரிநிகர் சமானமாக சமத்துவத்துடன் வாழ இறைவன் கிருபை செய்ய வேண்டும்.
 
கடந்த 64 ஆண்டுகளாக செய்த ஒப்பந்தங்களை கிழித்து ஏமாற்றியது போன்று அல்லாது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இலங்கை ஆசியாவிலே ஓர் அதிசயமான முன்மாதிரியான நாடாக மாறி மனித உரிமைகளுடன் ஜனநாயக உரிமைகளும் மதிக்கப் பட்ட ஓர் புண்ணிய பூமியாக மாற வேண்டுமானால் அவர் தமிழர் களுடன் ஒரு நியாயமான தீர்வுக்கு முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment