Translate

Monday 3 September 2012

தமிழர்களை அகதிகளாக்கி இந்தியாவின் அரசியலில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் குழப்பத்தை உருவாக்கி வருகிறது'


தமிழர்களை அகதிகளாக்கி இந்தியாவின் அரசியலில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் குழப்பத்தை உருவாக்கி வருகிறது' என்று இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் மச்குந்த் துபே கூறியுள்ளார்.

வங்கதேசம் சக்மா அகதிகளை அனுப்பியது போல் இலங்கை ஈழத் தமிழர்களை அனுப்பி வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறிவரும் உலகில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் ஒன்றை துபே வெளியிட இருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

'ஜம்மு காஷ்மீரிலும் சர்வதேச எல்லைப் பகுதியிலும் தீவிரவாதிகளை ஊடுருவுவதில் பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவின் நிலைத் தன்மையை நிலைகுலையச் செய்வதும் தீவிரவாதத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதும்தான் பாகிஸ்தானின் திட்டம்.

சீனாவைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு அது நேரடி அச்சுறுத்தல் விடுக்கக்கூடிய ஒரு நாடாகும். அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை சீனா மிரட்டுகிறது.

வங்கதேசத்தை பொறுத்தவரை வடகிழக்கு மாநில தீவிரவாத குழுக்களுக்கு முகாம் அமைக்க இடம் கொடுத்து அங்கிருந்து தீவிரவாதிகளை எல்லை கடக்க வைக்கிறது. இதைமட்டுமின்றி வங்கதேசத்தை ஊடுருவச் செய்து ஆயுதவழியற்ற இன மோதலையும் வங்கதேசம் ஊக்குவித்து வருகிறது. அசாம் இப்பொழுது பற்றி எரிய இதுவே காரணம்.

இதேபோல்தான் இலங்கையும். தமிழர்களை அகதிகளாக்கி இந்தியாவின் அரசியலில் குழப்பத்தை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. வங்கதேசம் சக்மா அகதிகளை அனுப்பியது போல் இலங்கை ஈழத் தமிழர்களை அனுப்பி வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது என்று அதில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment