Translate

Monday, 3 September 2012

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்குபற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு அழுத்தம்; அரியம் எம்.பி குற்றச்சாட்டு

news
ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்குபற்றுமாறு அரச அதிகாரிகள் வற்புறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


மட்டக்களப்பில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டத்திற்கு பாடசாலை மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்  கலந்துகொள்ள வேண்டும் என கட்டாயமாக அழைக்கப்பட்டுள்ளதாகவும் இது ஒரு தேர்தல் சட்டத்திற்கு முரணான செயல் எனவும் அரியநேத்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இன்று ஜனாதிபதி மட்டக்களப்புக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யும் அவருடன் தென்பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வந்துள்ளதாகவும், அவர்களில் நீலநிற ரீசேட் அணிந்த சிலர் மட்டக்களப்பு நகரெங்கும் சுற்றித் திரிவதாகத் தெரிவித்துள்ள அவர்,

மட்டக்களப்பு தமிழ் மக்கள் அவர்களிடம் அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment