
இனவழிப்பிற்குத் துணைபோனவர்கள் இன்றுவரை அதை முற்றாக மறைக்கவோ அல்லது மறுக்கவோ பகீரதப் பிரயத்தனம் செய்துவருகையில் சிங்களம் தங்குதடையின்றி இனவழிப்பை முன்னெடுத்து வருகிறது.
பல முன்னால்ப் பெண்போராளிகள் சித்திரவதைக் கூடங்களில் அடைபட்டுக் கிடந்த காலத்திலோ அல்லது “விடுதலை” செய்யப்பட்டு வாராவாரம் காவல் நிலையத்திற்கு பதியப் போகும் போதிலோ சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தால் தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டு கட்டாயக
் கருவூட்டலுக்கு ஆளாகி வருகின்றனர். கட்டாயக் கருவூட்டலை மறுக்கும் பெண்போராளிகளின் குடும்பங்கள் இலக்கு வைக்கப்பட்டுத் தாக்கபடுவதால், பல பெண்போராளிகளின் நிலமை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இவ்வாறு கட்டாயச் சிங்களக் கருக்களைத் தாங்கி தம்மிடம் வரும் முன்னால்ப் பெண்போராளிகளை என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவ அதிகாரிகளும் கலங்கி நிற்கின்றனர்.
அந்தக் குறிப்பிட்ட மருத்துவ அதிகாரியின் கருத்துப்படி, தம்மிடம் ஒரு 8 மாதக் கற்பினிப் பெண்போராளி வந்ததாகவும், அவரைத் தான் கன்னியாஸ்த்திரிகளின் பராமரிப்பில் ஒப்படைத்ததாகவும் கூறுகிறார். “இப்படியாகப் பல பெண்போராளிகள் எம்மிடம் வருகிறார்கள், எம்மால் என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று அவர் கூறுகிறார்.
“இப்படியானவர்களை உள்ளூரில் பாதுகாப்பதற்குச் சர்வதேசச் சட்டங்களோ அல்லது வெளியுலகில் புகலிட வசதிகளோ இல்லை” என்று கூறும் அவரின் கருத்தையே இன்னொரு பெண் மருத்துவ அதிகாரியும் கூறுகிறார்.
No comments:
Post a Comment