Translate

Monday 3 September 2012

ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் நாடகம் போடுவது யார் என்பதற்கு இந்தப்படம் சாட்சி..

இலங்கையில் பிரச்சினை தீர வேண்டும் என காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஆனால், பிரச்சினை நீடிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


 இலங்கைத் தமிழர் பிரச்சினையை, முன் வைத்தே தமிழகத்தில் பல கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. அங்கு பிரச்சினை இல்லை என்றால், இங்குள்ள பல கட்சிகள் நடையைக்கட்ட வேண்டியது தான்.இலங்கை பிரச்சினையில
் சுமுக தீர்வு காண, காங்கிரஸ் கட்சி முனைப்போடு செயல்படுகிறது. 





இலங்கை போரால் பாதித்த தமிழர்களின் மறுவாழ்விற்காக, 50 ஆயிரம் வீடுகள் கட்டித் கொடுத்துள்ளது. 





வடபகுதி ரயில் பாதை அமைத்துள்ளது. 1,300 தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகளை சீரமைத்து தமிழர்களின் மறுவாழ்விற்கு வழிவகுத்து வருகிறது.இவ்வளவு செய்தும், விளம்பரம் இல்லாத காரணத்தால், காங்கிரஸ் கட்சி ஒன்றுமே செய்யாதது போல் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சித்தரிக்கின்றன.இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ள திட்டங்களை பத்திரிகைகள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.

-இது ஊடகங்களில் வந்துள்ள செய்தி-

திரு ஞானதேசிகன் அவர்களே !

இந்திய கட்டித் தந்ததாக தாங்கள் கூறும் முதலில் 50 ஆயிரம் வீடுகளையும் காட்ட வேண்டாம் முதலில் ஒரு வீட்டையாவது காட்டுகள்.

குறிப்பு - ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் நாடகம் போடுவது யார் என்பதற்கு இந்தப்படம் சாட்சி..

No comments:

Post a Comment