Translate

Saturday, 3 November 2012

13வது சீர்திருத்தத்தை நீக்கினால் மகிந்த அரசிலிருந்து விலகுவேன்; பிரபா கணேசன் எச்சரிக்கை

13வது திருத்த சட்டத்தை அரசாங்கம் அகற்ற முற்பட்டால் அரசாங்கத்திற்கான தனது ஆதரவை வாபஸ் பெறுவேன்என  ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13வது திருத்த சட்டமான மாகாணசபை முறைமையை ஆதரிப்பவர்கள் அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்திற்கும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் பிற கட்சிகளான எங்களை அரசாங்கத்தை விட்டு வெளியேற சொல்வதற்கு இவர்களுக்கு எவ்வித அருகதையும் இல்லை. விமல் வீரவன்ச ஜே.வி.பியில் இருந்த பொழுது இக்கட்சி இனவாதம் பேசியது.
அதே போல் ஹெல உறுமய கடந்த முன்னைய பாராளுமன்ற தேர்தலில் இனவாதம் பேசி தனித்து போட்டியிட்டு அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்டது. இருப்பினும் இந்த இனவாத போக்கினால் கடந்த தேர்தலில் இவர்கள் ஒரு சில ஆசனங்களையே பெற்றுக் கொண்டனர். இனவாதம் பேசுபவர்களுக்கு இப்படியான முடிவே வரலாறாகும்.
யுத்தம் முடிவுற்ற பின்பு சிங்கள மக்கள் தமிழ் பேசும் மக்களுடன் ஐக்கியமாக வாழ்ந்து அவர்களுக்கு அதிகார பரவலாக்கலை வழங்க தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் 13வது திருத்த சட்டத்தை அகற்ற கோரி ஹெலஉரிமய, விமல் வீரவன்ச போன்றவர்கள் மீண்டும் இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.
அரசாங்கம் ஒரு போதும் 13வது திருத்த சட்டத்தை அகற்றுவதாக தெரிவிக்கவில்லை. ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஒருபோதும் மாகாணசபை முறைமையை இல்லாதொழிப்பதற்கு விருப்பமில்லை என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாகத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment