திருகோணமலை மாவட்டத்தில் உள்ள நிலாவெளியில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகவிடுதியில் தங்கிக் கல்வி கற்று வந்த தமிழ் மாணவர்களை இனவாத அடிப்படையில் 27.10.2012 அன்று இரு தமிழ் மாணவர்களையும் 31.10.2012 அன்று சில தமிழ் மாணவர்களையும் சிங்கள மாணவர்கள் உடல்ரீதியாக தாக்கியுள்ளார்கள். தமிழ் மாணவர்கள் தம்மீது நடாத்தப்பட்ட தாங்குதலை எழுத்து மூலம் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பியும் சிங்கள மாணவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆகையால் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 31.10.2012 புதன்கிழமை தங்குவிடுதியிலிருந்து கிழக்கு பல்கலைக்கழகம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேரூந்தில் புத்தரின் படம் கிழிக்கப்பட்டிருந்தை தொடர்ந்து எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள்.
திருகோணமலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் அதிகமான எண்ணிக்கையுடன் கல்வி கற்று வரும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து சிங்கள மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது இலங்கைப் பல்கலைக்கழக ஒன்றியம். கிழக்கு பல்கலைக்கழகத்தை முற்றிலும் சிங்களமயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய கல்வியாண்டில் 25 தமிழ் மாணவர்கள் மற்றும் 200 – 240 சிங்கள மாணவர்களை நிர்வாகம் சேர்க்கவுள்ளது. கற்பித்தலிலும் ஆசிரியர்கள் இனவாத அடிப்படையில் செயற்ப்படுகின்றார்கள்.
அரசியல் பின்னணியுடன் தாக்குதல் நடாத்தும் சிங்கள மாணவர்களுடன் தம்மால் இணைந்து கல்விகற்க முடியாது எனக் கூறி,தமிழ் மாணவர்கள பல்கலைக்கழகத்திற்கும் பல்கலைக்கழக தங்குவிடுதிக்கும் செல்லவில்லை, அவர்கள் உடல் மற்று உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ் இனவழிப்பு மற்றும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்ற சிங்கள பேரினவாத அரசு இன்று சிங்கள மாணவர்கள் மூலம் தமிழர்களின் கண்னான கல்வியிலும் தன்னுடைய இனசுவ மீண்டும் காட்டி தமிழ் மாணவர்களை தாக்குவதையும் நில அபகரிப்பையும் இவ்வறிக்கை ஊடாக யேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சர்வதேச நாடுகள் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும், மேலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்ப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
நன்றி
இவ்வண்ணம்
தமிழ் இiளையோர் அமைப்பு – யேர்மனி
ஊடகப்பிரிவு
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
No comments:
Post a Comment