Translate

Tuesday 6 November 2012

அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடத்தவறும் நீதியரசர்கள் தியவன்ன குளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர்; சரத் என் சில்வா

ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடத் தவறும் பிரதம நீதியரசர்கள் நாடாளுமன்றிற்கு அருகாமையில் உள்ள தியவன்ன ஓய குளத்தில் மூழ்கடிக்கப்படுகின்றனர் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தாளத்திற்கு ஆடினால் பிரதம நீதியரசர் குற்றமற்றவர் 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளனர்.எனது மாணவியான அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிதான்இ பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு தலைமை தாங்குகின்றார்.

என்ன குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படடுள்ளன என்பது பற்றிஇ குற்றப் பிரேரணையில் கையொப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியுமா? அல்லது குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியங்கைள ஆராய்ந்து பார்த்தார்களா? என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment