இலங்கை தமிழர்களுக்கு, அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ஐ.நா., சபையில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஒப்படைத்த வேளையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி., கனிமொழி சந்தித்து, ஐ.நா., சபை மனித உரிமை கமிஷனில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தை வழங்கினார்.
ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த பின், பிரதமரை, கனிமொழி சந்தித்திருக்கலாம், ஐ.நா., சபையில், ஸ்டாலின் மனு கொடுக்கும் போது, கனிமொழி, பிரதமரிடம் கடிதம் கொடுப்பது, போட்டா போட்டியாக இருக்கிறது என, ஸ்டாலின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்காக ஐ.நா., சபையில் ஸ்டாலினும், பிரதமர் அலுவலகத்தில் கனிமொழியும் வலியுறுத்துவது கட்சிக்கும், தனக்கும் கிடைக்கும் அரசியல் லாபம் என, கருணாநிதி கருதுகிறார்.
தி.மு.க., ஆட்சியில் இலங்கையில் போர் நடந்தது. அப்போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க., நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை தமிழ் ஆர்வலர்கள் எழுப்பினர்.அந்த குற்றச்சாட்டை களைவதற்கும், இலங்கை தமிழர்களுக்காக ஐ.நா., சபையில் குரல் கொடுத்த முதல் அரசியல் கட்சி தி.மு.க., என்பதை வரலாற்றில் பதிவு செய்து கொள்ளவும் கருணாநிதி விரும்புகிறார். அ@த @நரத்தில், ஸ்டாலினை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதை தவிர்க்க, கனிமொழியை களமிறக்கி விட்டுள்ளார்.
இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கனிமொழியும் தவிர்க்க முடியாத சக்தியாக தி.மு.க.,வில் வலம் வருகிறார். எனவே, அவரை ஏன் பகைக்க வேண்டும் என, சில மாவட்டச் செயலர்கள் கருதுகின்றனர். அதனால், தான் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையில் நிர்வாகிகளை நியமிக்க, கட்சியினரை மாவட்டச் செயலர்கள் சிபாரிசு செய்து வருகின்றனர்.
இருப்பினும், கட்சியில், ஸ்டாலினுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்குவது மற்ற வாரி”கள் விரும்ப மாட்டார்கள் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார். ஸ்டாலின் - அழகிரி என்றிருந்த இரு அணிகளில், அழகிரி, சமீபகாலமாக ஒதுங்கி வருவதால், அந்த இடத்தில் கனிமொழியை நிறுத்த விரும்புகிறார்.
அதன் காரணமாகவே, ஸ்டாலினை ஐ.நா.,வுக்கு அனுப்பி வைத்து விட்டு, டில்லியில் பிரதமரை, கனிமொழியை சந்திக்க வைத்துள்ளார். ஒருவர் உலக நாடுகளை சுற்றி வந்து நிற்க, மற்றொருவர் உள்ளூரிலேயே வலியுறுத்த, புதுவிதமான திருவிளையாடலை கருணாநிதி நடத்தியுள்ளார்.இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment