சர்வதேச அரங்கொன்றில் சிறிலங்காவினை அம்பலபடுத்தவும், தமிழர்களின் நியாயப்பாட்டினை வலியுறுத்தவும் கிடைத்த இன்னுமொரு இராஜதந்திரக்களமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நோக்கியிருந்தது.
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் இடம்பெற்று முடிந்த, சிறிலங்கா மையப்படுத்திய மனித உரிமைகள் நிலைவர மீளாய்வுக் கூட்டத் தொடரினை மையப்படுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது செய்பாட்டினை தீவிரப்படுத்தியிருந்தது.
சிறிலங்கா தொடர்பிலான மீளாய்வு அமர்வுக்கான தனது அறிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏலவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபைக்கு அனுப்பியிருந்தது.
இவ்மீளாய்வுக் கூட்டத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கும் இந்தியாவினை கருத்தில் கொண்டு, இந்திய மத்திய அரசுக்கு அழுத்தும் கொடுக்குமாறு கோரி, தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கும் கடிதமொன்றினை நா.த.அரசாங்கம் ஏற்கனவே அனுப்பியிருந்தது.
இதன்தொடர்சியாக, சிறிலங்கா தொடர்பிலான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்ற இக்காலப்பகுதியில் தனது பரப்புரைச் செய்பாட்டினை ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் உள்ள பலவேறு நாடுகளது தூதர்கள், இராஜந்திரிகள், ஐ.நா அதிகாரிகள் என பல்வேறு தரப்பினர்களுடனும் சந்திப்புக்களை நடத்தி, தமிழர்களது நியாயமான உரிமைப் போராட்டத்தினை வலியுறுத்தியிருந்ததோடு, சிறிலங்காவினை அம்பலப்படுத்தும் பரப்புரையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை சிறிலங்கா தொடர்பிலான இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் ஒர் காத்திரமான மாற்றத்தினை ஏற்படுத்தும் நோக்கில் ,தமிழக மக்கள் கொடுக்க வேண்டிய அழுத்தங்கள் தொடர்பிலும், தமிழக ஊடகங்ளுக்கு ஜெனீவாவில் இருந்தவாறு பரப்புரைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரத்றை அமைச்சர் வாசுகி தங்கராஜா, அவைத்தலைவர் பொன் பாலராஜன், மக்கள் பிரதிநிதி மாணிக்கவாசகர், அமைச்சரவைச் செயலர் சுகிந்தன் முருகையன் ஆகியோர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய ஐ.நா நிலைவரம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த அவைத்தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் : பேச்சில் ஒன்றும் நடைமுறையில் ஒன்றுமாக செயற்படும் சிறிலங்கா அனைத்துல சமூகத்தினை ஏமாற்றும் மீண்டுமொரு சர்வதேச மோசடியினையே இன்றும் அரங்கேற்றியிருந்தது.
தமிழ் மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு சாதகமாக அமையாவிட்டாலும் தமிழ் மக்களின் கவலையையும் சுமையையும் எதிர்பார்ப்பையும் சர்வதேசம் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளதனை உணரக்கூடியதாக இருந்தது.
போர் நடந்த காலத்தில் சிறிலங்காவுக்கு உலக நாடுகள் ஆதரவளித்த நிலைமாறி சிறிலங்கா விவகாரத்தில் உலக நாடுகள் இரு அணிகளாக பிரிந்து நின்று விவாதித்ததை காணமுடிந்தது.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகள் இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்டித்து தமிழ் மக்களுக்கு நீதியான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றன.
ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உட்பட சில முஸ்லீம் நாடுகள் சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்றன.
இந்தியா எந்தப் பக்கமும் இல்லாது தனித்து நின்றது.
இவ்வாறு பொன் பலாராஜன் அவர்களது கருத்துக்கள் அமைந்திருக்க, அடுத்தாண்டு மார்ச் மாதம் இடமபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையினை கூட்டத் தொடரினை மையப்படுத்தி ,நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு மற்றும் இனவழிப்பு, போர்குற்றம், மானிடத்துக்கெதிரான குற்றவிசாரணைகளுக்கான அமைச்சு ஆகியன தங்களது செயற்பாடுகளை தீவிரமாக்கியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
நாதம் ஊடகசேவை
No comments:
Post a Comment