Translate

Tuesday 6 November 2012

இலங்கை விடயத்தில் ஐ.நா.பாராமுகமாக உள்ளதா? கேள்வியெழுப்புகிறது இன்னர் சிற்ரி பிரஸ்

ருவண்டாவில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு தீர்வு கண்ட ஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு தீர்வு காணவில்லை என இன்னர் சிற்ரி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
ருவாண்டாவில் இடம்பெற்ற ஆயிரக்கணக்கான மக்களின் இனப் படுகொலைக்கு எதிராக அந்த நாட்டு அரசு மீது நடவடிக்கை எடுத்த ஐ. நா சபையால் ஏன் இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு தீர்வு காணவில்லை என  இன்னர் சிற்ரி பிரஸ் ஐ.நா செயலர் பான் கீ மூனிடம் கேள்வி தொடுத்துள்ளது.

மேலும் இலங்கையில் யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு  இதுவரை உரிய தீர்வினை காண ஏன் ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் இன்னர் சிற்ரி பிரஸ் பான் கீ மூனிடம் தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஐ.நாவின் உத்தியோகபூர்வ ஊடகமான இன்னர் சிற்ரி பிரஸின் மேற்கண்ட கேள்விகளினால் இலங்கை கடும் சீற்றத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 40 ஆயிரம் பேர் தொடர்பில் அகில கால மீளாய்வில் விளக்கமளிக்கப்பட வேண்டும் என நிபுணர் குழுவின் தலைவர் தருஸ்மன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment