வடக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் நடவடிக்கைகளிலிருந்து இராணுவத்தை நீக்கிகொள்ள வேண்டும் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் மிச்செல் சிசன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீடு இன்னமும் காணப்படுகின்றது. எனவே இதனை விலக்கிகொள்ள வேண்டும்.
இலங்கையில் இன்னமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுளும் தயாராகவே உள்ளன.
இந்தநிலையில் இலங்கை தமது இணக்கப்பாடு தொடர்பிலான தமது சொந்த நல்லிணக்க அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment