Translate

Friday 20 May 2011

அன்பான தமிழீழ, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!

அன்பான தமிழீழதமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களே!

இன்று தமிழீழத் தேசிய துக்கநாள்

சிறிலங்கா அரசு ஈழத் தமிழர் தேசத்தின் மீது நடத்திய இனஅழிப்புக் கொடூரங்களின் வெளிப்பாடாய்ஈழத் தமிழர்களைமட்டுமன்றி உலகின் அனைத்துத் தமிழர்களையும் ஆழ்ந்த சோகத்தில் உறைய வைத்த நிகழ்வுகளின் குறியீடாய் அமைந்துவிட்ட நாள்.
தென் தமிழீழத்தில் ஆரம்பித்து வன்னிப் பெருநிலமெங்கும் படர்ந்து விரிந்த சிங்களத்தின் கொடுங்கரங்கள்முள்ளிவாய்க்கால் மூலைக்குள் வைத்து நமது மக்களைக் கொன்றொழித்து இனப்டுகொலை புரிந்த பெரும் கொடுமையின்இரத்த சாட்சிமாய் அமைந்து விட்ட நாள்.


தேசிய தலைவர் மேதகு வேபிரபாகரனின் வழிநடத்தலாலும் மாவீரர்களின் ஈகத்தாலும் வீரத்தாலும் உருவாக்கப்பட்டநிகழ்வுபூர்வமான தமிழீழம்தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியைஉருவாக்கிய நிகழ்வுபூர்வமான தமிழீழம் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு முழுமையாக உள்ளான கரி நாள்.
சிங்கள இனவாதப்பூதத்தின் கோரதாண்டவத்தில் 80,000 க்கும் மேற்பட்ட நமது உறவுகள் கொத்துக் கொத்தாக நம்கண்முன்னாலேயே கொல்லப்பட்டு நாகரீக உலகை அதிரச் செய்த பெரும் இனப்படுகொலை நடந்தேறிய நாட்களின்உச்சமாக அமைந்து விட்ட நாள்.
இந்த நாளில் சிங்களஆக்கிரமிப்பாளர்களால் நரபலி எடுக்கப்பட்டு தமது இன்னுயிர்களை இழந்த அனைத்துத்தமிழர்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தைச் செலுத்திக் கொள்கிறதுசிங்களத்தின்ஆக்கிரமிப்பை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத் தினத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏன் தமிழீழ தேசிய துக்க நாளாகப் பிரகடனப்படுத்தியது?
ஈழத் தமிழர் தேசத்தில் வரலாறு காணாத அளவுக்கு துன்பமும் துயரமும் அவலமும் நிரம்பியதாக நமது மக்களின் வாழ்வுபோரின் இறுதிக் கட்ட நாட்களில் சிங்களத்தால் சின்னா பின்னமாக்கப்பட்டிருந்தது.
மக்கள் தம் வாழ்விடங்களெங்கும் - வீதிகளில்வீடுகளில்பள்ளிக்கூடங்களில்வழிபாட்டுத்தலங்களில்,மருத்துவமனைகளில்திருமணவீடுகளில்இழவுச் சடங்குகளில் எங்கும் நமது மக்கள் துரத்தித் துரத்திக்கொல்லப்பட்டார்கள்.
நடக்கும்போதும்படிக்கும்போதும்உண்ணும்போதும்உடுக்கும் போதும்உறங்கும் போதும்கூடும்போதும்இயலாதுஇருக்கும் போதும் எங்குமே எப்போதுமே கலைத்துக் கலைத்து வேட்டையாடப்பட்டார்கள்.
குப்பை கூளங்களைக் கூட்டித் தள்ளி ஒரு மூலைக்குள் வைத்துத் தீயிட்டுக் கொழுத்துவதைப்போல – மூட்டைப்பூச்சிகைளதட்டிக் கொட்டி ஒருங்கு சேர்த்துக் காலால் நசுக்குவதைப்போல - நமது மக்களை அடித்துத் கலைத்து விரட்டிச் சென்றுகடற்கரையோரத்தில்ஒரு சிறிய நிலப்பகுதியில் வைத்து நரபலி எடுத்தது சிங்களம்.
தமிழீழ மக்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்ட  இந்த நினைவுகள் தமிழ் மக்களின் கூட்டு நினைவுகளாக தலைமுறைதலைமுறையாக உலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் நிலைக்கப் போகின்ற நினைவுகள்.

இந் நினைவுகளைப் பேணுவதற்கும் தலைமுறை தலைமுறையாய் எடுத்துச் செல்வதற்கும்தமிழீழ மக்கள் அடைந்ததுயரையும் அவலத்தையும் உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களும் நினைவு கொள்ளக்கூடிய வகையில் மே 18 ஆம்நாளைத் தமிழீழ தேசிய துக்க நாளாக  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரகனடம் செய்துள்ளது.
இத் தேசிய துக்க நாளையும் ஒவ்வொரு வருடமும் மே 12-18 க்கு இடைப்பட்ட நாட்களினை இனப் படுகொலையின்நினைவேந்தல் வாரமாகவும் துயர் பகிரவும்உணர்வு பெற்றுஎழுச்சி கொள்ளவும் உரியவகையில் நடைமுறைப்படுத்துவதுஎனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முடிவு செய்திருக்கிறதுஇவ் வருடம் முதற் கொண்டு இந் நடைமுறைஆரப்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு (Collective memory) ஆகும்யூதர்கள்மேல்நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு (holocaustஎவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாகஅமைந்ததோ அதேபோல தமிழர்களுக்குஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லஉலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்முள்ளிவாய்க்கால்ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறதுதமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் இரத்தசாட்சியமாக இருக்கிறது.
துயர்தோய்ந்தஅவலம் நிரம்பிய கூட்டுநினைவுகள் ஒரு மக்கள் கூட்டத்தின் ஆழ்மனதில் காலம் காலமாக நிலைத்து நிற்கக்கூடியவைவரலாற்றை மாற்றும் சக்தி கொண்டவையூத மக்களின் தமக்கான தனி அரசு என்ற கனவு நாசிஇனப்படுகொலையின்பின் தான் சாத்தியமாகியதுபலஸ்தீன மக்களுக்கென எதிர்காலத்தில் உருவாகவிருக்கும் தனிஅரசும்இம் மக்கள் தாம் அனுபவித்து வரும் ஒடுக்குமுறைகளின் கூட்டுநினைவினை அரசியல் இயக்கமாகத் தொடர்ச்சியாகப்பேணிவருவதனால்தான் சாத்தியமாகப் போகிறதுஈழத் தமிழ் மக்களுக்கும் இவ்வுதாரணங்கள் மிகவும் பொருந்தப்போகின்றன.
தமிழீழத் தேசிய துக்க நாள் நாம் துயரத்தால் துவண்டு போகும் நாள் அல்லமாறாக நமது மக்கள் அடைந்த துயரத்தையும்துன்பத்தையும் அவலத்தையும் நமக்குள் உயிர்ப்பாய் உள் வாங்கி –  நாம்ஒரு தேசமாக பாதுகாப்பாகவும் கௌரவமாகவும்வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை நமக்குள் நாமேஉறுதி பூண்டிடும் நாளாக இது அமைய வேண்டும்.

நமது மக்களை இனஅழிப்பு செய்தவர்களைநமது மக்களுக்கெதிராக குற்றங்கள் புரிந்தவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்கு நாம் உத்வேகத்துடன் செயற்படுவதற்கு திடசங்கற்பம் பூணும் நாளாக இது அமைய வேண்டும்.
சிங்களத்தால் சீரழிக்கப்பட்ட நமது மக்களின் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் உறுதுணையாக நின்றுசெயலாற்ற வேண்டிய அவசியத்தை நமக்குள் நன்கு உள்ளிருத்திக் கொள்ளும் நாளாக இது அமைய வேண்டும்.
இவை குறித்த செயற்பாடுகளை நாம் இன்னும் துணிவுடன் முடுக்கி விட இந்த நாள் உத்வேகம் கொடுக்கும் நாளாக அமையவேண்டும்.
தமிழீழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாகத் தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினைமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும்தெளிவாக உணர்த்தி வருகின்றன.
இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம்தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாகநியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதேசங்கள் தமக்கானசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனிஅரசினை அமைப்பதற்கும் அனைத்துலக சட்டங்கள் வழிவகை செய்கின்றன.
ஆனால் இச் சட்டங்கள் எல்லாம் உலகின் பலம் வாய்ந்த அரசுகள் விரும்பும்போது மட்டும்தான் செயல் வடிவம்பெறுகின்றனநீதியின்பாற்பட்டு அன்றி தமது சுயநலன் சார்ந்தே இந்த அரசுகள் தமது முடிவுகளை மேற்கொள்கின்றன.இத்தகையதொரு உலக ஒழுங்கில்தான் நாம் நமது இலட்சியப்பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதுஇது இன்று நாம்எதிர் நோக்கும் முக்கியமான ஒரு சவால்இத்தகையதொரு சவால் மிக்க ஒரு சூழலில் நமக்குக் கிடைக்கக்கூடிய சாதகமானவாய்ப்புக்களையெல்லாம் தவற விடாமல் பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த வகையில்தற்போது வெளிவந்துள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையினை நாம் சாதகதாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ் அறிக்கை சிறிலங்கா அரசு புரிந்துள்ள போர்க்குற்றங்களை மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை தெளிவாகக்கோடிட்டுக் காட்டியுள்ளதுசிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பின்னர் 140,000 வரையிலானதமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என கணக்கிட முடியாததாய் உள்ளது என்பதனையும் இவ் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.அதே வேளை இவற்றை சிறிலங்கா அரசின் தமிழர்கள் மீதான இன ஒழிப்பின் (genocideஒரு அங்கமாக இவ் அறிக்கைவகைப்படுத்தவில்லை.
இருந்து போதும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை சுட்டிக்காட்டிய சிறிலங்கா படையினர்

No comments:

Post a Comment