இலங்கை கொழும்புவில் உள்ள வெலிக்கடை சிறையில் தண்டனை வெற்ற சிறைவாசிகள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர், ஒருவர் இந்தியர், இன்று மாலை சுமார் 5.32 மணிக்கு சிறை கூடத்தின் மேல் ஏறி கொண்டு, தங்களை விடுதலை செய்யுமாறு வேண்டி, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாய் அறிவித்துள்ளனர்.
உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சிறைவாசிகள் அனைவரும் ஆயுள் தண்டனை பெற்றவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும், 19 வருடம், 20 வருடங்களாய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக, இலங்கையில், 12 அல்லது 13 ஆண்டுகளில், ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால், மகேந்த ராசபக்சே பதியேற்றது முதல், ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை. இதனாலேயே, இன்று மாலை 6 மணிக்கு சிறை அடைப்பதற்கு முன், 9 பேரும் சிறைக் கூடத்தின் மேல் ஏறி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இதனால், வெலிக்கடை சிறை பதற்றமாய் காணப்படுகிறது. அனைத்து பிற சிறைவாசிகளை உடனே சிறைக்குள் அடைக்கப்பட்டனர். காவல்துறையினர் தற்போது, துப்பாக்கிகளை கையிலெடுத்து கொண்டு, சிறையினுள், இங்கும் அங்கும் ஒடிக் கொண்டிருக்கின்றனர். எந்த நேரத்திலும், துப்பாக்கி சூடு நிகழலாம் என செய்திகள் வருகின்றன. மனித உரிமைகளை பற்றிய கவலை கொள்ளாத, இலங்கை, இச்சிறைவாசிகளிடம் உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விடும் என பிற சிறைவாசிகள் அஞ்சுகின்றனர்.
- அக்னி சுப்பிரமணியம்
செயல் இயக்குநர், மனிதம்.
No comments:
Post a Comment