ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் ஈரான் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. நேற்றைய தினம் நடந்த இந்தச் சந்திப்பில் இலங்கைத் தூதுவர் நீமோல் பெரேரா கலந்துகொண்டுள்ளார். ஈரான் துணை வெளிவிவகார அமைச்சரையே பெரேரா சந்தித்து கலந்துரையாடியதாக அறியப்படுகிறது.
இலங்கைக்கான ஆதரவை மேலும் பலப்படுத்தவும், ஐ.நா அறிக்கை குறித்து மேற்குலகம் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தமக்கு உதவுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனை அடுத்து தாம் இலங்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாக ஈரான் துணை வெளிவிவகார அமைச்சர் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். இந்த வாக்குறுதிகளைப் பெற்றுக்கொண்ட இலங்கைக்த் தூதுவர், அதனை மகிந்தருக்கு அறிவித்தும் உள்ளாராம்
No comments:
Post a Comment