கொடிய போரின் போதும், அதன் பின்னரும் தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்பட்டுவரும் மக்களையும், வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவுகூர்ந்து மில்ரன் கீன்ஸ் பகுதியில் இடம்பெற்ற ஆத்மசாந்தி பூஜை.
ஆம் ஆண்டு கொடிய போரின் போதும், அதன் பின்னரும் சிங்கள பேரின வாதத்தால் தொடர்ச்சியாக இனப்படுகொலை செய்யப்பட்டுவரும் மக்களையும், போரில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களையும் நினைவுகூர்ந்து மில்ரன் கீன்ஸ் பகுதியில் ஆத்மசாந்தி பூஜை இடம்பெற்றது.
நேற்றைய தினம் (03-06-2011) வெள்ளிக்கிழ்மை மாலை பிரித்தானியாவின் மில்ரன் கீன்ஸ் பகுதியில் உள்ள முருகன் ஆலயத்திலேயே இந்த ஆத்மசாந்தி பூசை இடம்பெற்றது.
போரினால் பாதிக்கப்பட்டு உறவுகள், மற்றும் உதவிகள் இன்றி கைவிடப்பட்ட நிலையில்உள்ளவர்களை தேடி அவர்களுக்கான உதவிகளையும், கல்வி, மற்றும் சுயதொழில்வேலைவாய்ப்புக்களையும் வழங்கி வருவதோடு போராளிகள் குடும்பங்களையும் பராமரித்துவரும்பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் தேசத்தின் பாலம் அமைப்பு இந்த ஆத்மசாந்தி பூசையை ஏற்பாடுசெய்திருந்தது.
இதே போன்ற ஆத்மசாந்தி பூஜையை கடந்த மாதம் லெஸ்டர் பகுதியிலும் தேசத்தின் பாலம்அமைப்பினர் நடாத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment