"மே" மாதத்திற்குரிய சரித்திர நாயகர்களையும், முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் படுகொலை செய்யப்பட்ட மக்களினதும் நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் இடப்பெற்றது.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டு லண்டன் கொலிண்டேல் பகுதியில் அமைந்துள்ள "சென் மெத்தீயூஸ் சேர்ச்" மண்டபத்தில் சனிக்கிழமை (28-05-20110) மாலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை ஜேர்மனில் இருந்து வருகை தந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி நிதியமைச்சர் திரு.நடராஜா ராஜேந்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து இதுவரைகாலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், விடுதலைக்கு உரம்சேர்த்து வித்தாகிப்போன மாவீரர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்க பலமாக நின்று பல வழிகளிலும் துயரப்பட்டு வலிசுமந்த போதிலும் இறுதிவரை தளராது தங்கள் பங்களிப்பை நல்கி இறுதியில் முள்ளிவாய்க்காலில் அடக்குமுறையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின்போது எம்மின விடுதலைகாய் தம் இன்னுயிர்களை ஈர்ந்து தமிழீழ வரலாற்றி
ன் அழியாத் தடங்களாய் பதிந்துபோன தமிழீழ மக்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த நினைவுருவப்படம் உட்பட, லெப்.கேணல் நவம், லெப்.கேணல் ராதா, கேணல் ரமணன், பிரிகேடியர் பால்ராஜ், பிரிகேடியர் சசிக்குமார், பிரிகேடியர் சொர்ணம் ஆகியோரின் திருவுருப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.தமிழீழத்தின் விடுதலைக்கான நீண்ட போராட்ட வரலாற்றில் ஆரம்பகாலம் தொடக்கம் தலைவனின் நம்பிக்கையான தளபதிகளில் ஒருவராகவும், தலைவரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவருமான முன்னாள் யாழ்மாவட்ட தளபதி லெப்.கேணல் ராதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரின் தந்தையார் திரு. கனகசபாபதி அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.
தொடர்ந்து இந்திய இராணுவம் அமைதிகாக்கும் படை என்ற ப
ெயரோடு உள்நுழைந்து பின் அப்பாவி மக்களையும் போராட்டத்தையும் அழிக்கும் நடவடிக்கையில் இறங்கிய காலத்தில் முல்லை மாவட்ட காட்டுப்பகுதியில் தேசியத்தலைவரின் பாதுகாப்பில் பொறுப்புடன் நிதானமாக செயற்பட்டதோடு மட்டுமன்றி பல வெற்றித்தாக்குதல்களையும் வழிநடத்திய சிறந்த தளபதியான லெப்.கேணல் நவம் / டடி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மேஜர் வெற்றி அவர்களின் சகோதரர் திரு. செல்வா அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.தொடர்ந்து விடுதலைப் போராட்டத்தில் தடைகள் ஏற்பட்ட போதெல்லாம் அதனைத் தகர்த்தெறிந்து விடுதலைப்போராட்டத்தை வீச்சோடு முன்னோக்கி நகர்த்திய தளபதியாகவும், வீரச்சாவின் பின்பே தான்
படைத்த சாதனைகளூடாக வெளியுலகிற்கு அறியப்பட்ட மாவீரனாகவும், தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், செயற்பட்ட தென் தமிழீழம் பெற்றெடுத்த செயல் வீரன் கேணல் ரமணன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவருடன் செயற்பட்ட திரு. பரதன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.தொடர்ந்து தமிழீழ வரலாற்ற
ில் சாதனைகள் பல படைத்து, சமர்க்களங்களில் எதிரிக்கு சிம்மசொற்பனமாய் திகழ்ந்த ஒப்பற்ற வீரன்,தேசியத்தலைவருக்கு பக்கபலமாக இறுதிவரை செயற்பட்டு, "முடியாது என்பது அவன் வரலாற்றில் இல்லை" என்பதை நிரூபித்து அசைக்கமுடியாததாக இருந்த ஆனையிறவையே தனக்கே உரித்தான புதிய யுத்தியால் தகர்த்தெறிந்து வரலாற்றில் தனகென ஒரு இடம்பிடித்து தேசியத்தலைவரினதும்,தமிழீழ மக்களினதும் பாசத்துக்குரியவனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழீழ விடுதலைக்கான செயற்பாடுகளில் பிரித்தானியாவில் தன்னை முன்னிறுத்தி செயற்பட்டுவரும் திரு.ஸ்கந்ததேவா அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.அடுத்து தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் உண்மை ஆசானாக இருந்து விடுதலைப் போரியல் வரலாற்றில் வேவு நாயகனாக செயற்பட்டு பல வெற்றிகளுக்கு வழியமைத்த பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மேஜர் சூரியகுமாரின் சகோதரி பாஸ்கரி விஜயதாஸ் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.
எமது பெரும் தலைவனின் கவசமாக ஆரம்பகாலம் முதல் இறுதிவரை செயற்பட்டதோடு மட்டுமன்றி முக்கிய பல தாக்குதல்களில் தனது சிறந்த போரியல் நுட்பத்தால் பல வீரவரலாறுகளை படைத்த மூத்த தளபதி சொர்ணம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவருடன் ஆரம்ப கால
ம் தொடக்கம் செயற்பட்ட திரு. போல் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பக்க பலமாக நின்று பல வழிகளிலும் துயரப்பட்டு வலிசுமந்த போதிலும் இறுதிவரை தளராது தங்கள் பங்களிப்பை நல்கிவந்த தமிழீழ மக்கள்
, அடக்குமுறையாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின்போது எம்மின விடுதலைகாய் தம் இன்னுயிர்களை ஈர்ந்து தமிழீழ வரலாற்றின் அழியாத் தடங்களாய் பதிந்துள்ளனர். அவர்களின் நினைவுசுமந்த பொதுவான நினைவுருவப்படத்திற்கு கப்டன் மலரோன் அவர்களின் சகோதரி திருமதி.உஷா இந்திரன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.தொடர்ந்து மக்களின் மலர்வணக்கமும், எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வுகளாக நடனங்கள்,கவிதைகள், நினைவுரைகள் என்பன இடம்பெற்றன.
நடனங்களை கவன்றி, சவுத்ஹோல், மில்ரங்கீன்ஸ் பகுதிகளை சேர்ந்த மாணவிகள் வழங்கியிருந்தனர். அத்தோடு நினைவுரைகளை பிரண்ட் நகரசபை உறுப்பினர்களின் தலைவரும்,லிபரல் கட்சி உறுப்பினருமான திரு. ஜேம்ஸ் அலி அவர்களும், பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதி திரு. திபாகரன் அவர்களும், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளும் அமைச்சர்களுமான திருமதி. பாலாம்பிகை, திரு. தயாபரன், ராஜேந்திரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் மிகவும் எழுச்சியோடும் உணர்வுபூர்வமாகம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமதுஉறவுகளுக்கும், மாவீரச்செல்வங்களுக்கும் தீபம் ஏற்றி தமது மலர்வணக்கத்தை செலுத்தி சென்றதை காணமுடிந்தது
No comments:
Post a Comment