Translate

Tuesday, 12 July 2011

மாவீரர் நினைவு சுமந்த மாபெரும் தமிழர் விளையாட்டு விழா - 2011.

மாவீரர் நினைவு சுமந்த மாபெரும் தமிழர் விளையாட்டு விழா - 2011.
வருடாந்தம் பிரித்தானியாவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா இவ்வருடமும் புதுப்பொலிவுடன் "மாவீரர் நினைவு தமிழர் விளையாட்டு விழா - 2011" எனும் பெயருடன்  பிரித்தானியாவில் நடைபெறுகின்றது.

எதிர்வரும் 27 ஆகஸ்ட் 2011 சனிக்கிழமை
அன்று வடமேற்கு லண்டன் பகுதியின் Windmill Ln, Southall, Middlesex UB2 4NE எனும் முகவரியில் உள்ள "Warren Farm Sports Centre"   ம  ைதானத்தில் தானத்தில் நடைபெறவுள்ளது.


பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக வருடா வருடம் நடைபெற்று வரும் மாபெரும் தமிழர் விளையாட்டு விழாவை இம்முறை பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் மிகவும் சிறந்த முறையில் சிறியோர், பெரியோர்களுக்கான விளையாட்டுக்களையும் இணைத்து எமது தாயகப் பாரம்பரியங்களோடு நடாத்தவுள்ளது.

தற்போதைய சூழலில் எமது தாயக மண்னில் உறவுகளால் எதனையும் சுதந்திரமாக செய்யமுடியாத நிலையில் எமது விளையாட்டுத் துறையினை வளர்க்கும் நோக்குடனும், எமக்குள் புரிந்துணர்வுகளை வளர்க்கவும் இம் மாபெரும் விளையாட்டு விழா வழியமைக்கும்.

எனவே வழமைபோல் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment