சனல்4ன் வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் – 4 செய்தி வெளியிட்டிருக்கிறது.

2009 ஆண்டு வன்னியில் மெற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவ நடவடிக்கையின்போது சரணடைந்த போராளிகளை படுகொலை செய்வதற்கான கட்டளையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செலாளர் கோதபாய ராஜபக்ஷ வழங்கினார் என ச்சனல் – 4 செய்தி வெளியிட்டிருக்கிறது.
பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு படுகொலை புரிவதற்கான கட்டளையை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ வழங்கினார் என யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சாட்சியம் வெளியிட்டிருப்பதாக ச்சனல்-4 குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், பாதுகாப்புச் செயலாளர் வழங்கிய கட்டளையானது இராணுவத்தினர் தான்தோன்றித்தனமாகச் செயற்படுவதற்கான சுதந்திரத்திற்கு வழிவகுத்திருந்தது என இந்த இராணுவ அதிகாரிகள் முதற் தடவையாக சாட்சியம் வெளியிட்டிருக்கின்றனர்.
ஆயுதம்தரிக்காத தமிழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டதை தான் நேரில் பார்த்தாக இந்த இராணுவ அதிகாரி சனல்-4 க்கு தெரிவித்தார்.
சிறிலங்கா இராணுவத்தினைச் சேர்ந்த ஒருவர் யுத்தகால குற்றம் தொடர்பாக சாட்சியம் அளித்திருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே வேவைளை, நடைபெற்ற போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என சிறிலங்கா அரசு அன்றுவரை தெரிவித்துவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா குமாரதுங்க கருத்துத் தெரிவிக்கையில், எனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான பெருந்திரளான மக்களை கொல்லவில்லை எனவும், தனது பிள்ளைகளும் இலங்கையின் படுகொலைக் களம் ஆவணத் திரைப்படத்தைப் பார்வையிட்டு, இவ் ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இப்படியான கொடுமையா நடந்தது என பயந்து, நாங்களும் ஒரு இலங்கைச் சிங்கள இனத்தைச் சேர்ந்தோம் என சொல்வதற்கே வெட்கமாக இருக்கின்றது என கூறியதாக சந்திரிக்கா தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment