Translate

Monday, 4 July 2011

லோர்ட்ஸ் மைதானத்தின் வாசலில் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட 7வது புறக்கணிப்பு போராட்டம்


இன்று இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தின் வாசலில் தமிழ் இளையோர்களால் முன்னெடுக்கப்பட்ட 7வது புறக்கணிப்பு போராட்டம் நூற்றிக்கும் அதிகமான மக்களுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது. வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியோர் வரை இன்றைய இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து இளையோருக்கு தோல் கொடுத்தார்கள்.


கடைசியாக இளையோர் நடத்திய போராட்டத்தின்போது சில சிங்கள காடையர் தமிழ் இளையோர்கள் மீது எச்சிலை துப்பியும் பெண்களை செட்டை செய்தும் எமது தேசிய கொடியை இறக்க சொல்லி பல தடவை இடையூறு செய்துஆரவாரத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் குறைந்த அளவு தமிழர்களே கலந்துகொண்டிருந்தனர். ஆனால் இன்று பெருமளவான தமிழர்கள் கலந்துகொண்டதாலும் பிரித்தானிய காவல்துறையினர் முழு பாதுகாப்பு தந்த படியாலும் போராட்டம் எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. இப் போராட்டத்தில் மைதானத்தினுள் இருந்து புகைப்படம் எடுக்க முயன்ற பல சிங்களவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களை அவ இடத்தில இருந்து அகற்றி இளையோர்களின் போராட்டத்திற்கு உதவி புரிந்துள்ளார்கள். இத் தருணம் நாம் காவல்துறையினருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்.
அத்தோடு மைதானத்தில் ஈழத்தமிழன் ஒருவர் தமிழீழ தேசியத் கொடியுடன் ஓடி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்தில் பிரபல்யமான ஸ்கை தொலைகாட்சி இவ் போராட்டத்தையும் ஈழத்தமிழன் தேசிய கொடியுடன் ஓடியதையும் ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இலங்கையை ஒதுக்கவேண்டும் என்றும், இன அழிப்பில் ஈடுபட்ட இலங்கையோடு உலக நாடுகள் கிரிகெட் விளையாடக்கூடாது என்றும் தமிழ் இளையோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி
சஞ்சய்
தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்


--
Media Team
Tamil Youth Organisation - United Kingdom

"Truth is incontrovertible, malice may attack it and ignorance
may deride it, but, in the end, there it is." - Sir Winston Churchill

No comments:

Post a Comment