கொடிய சிங்கள அரசின் கோரப்பிடியிலிருந்து தமது உயிரைமட்டும் காக்கும் நோக்கோடு நியூசிலாந்து நோக்கி சர்வதேசக் கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் போது இந்தோனேசியா கடற்படையால் வழிமறிக்கப்பட்டு பலவந்தமாக இந்தோனேசிய கடற்பரப்புக்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
இந்த கப்பலில் இருந்தவர்களில் சிலரிடம் விசாரணை நடத்தப் பட்டுள்ள நிலையில், தங்களை ஐ.நா மன்றமோ அல்லது நியுசிலாந்து நாடோ பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை தாங்கள் கப்பலை விட்டு இறங்கப் போவதில்லை என்று அவர்கள் கூறி வருகிறார்கள்
.இந்த நிலையில் அவர்கள் இந்தோநேசிய அரசினால் சிறீலங்காவிற்கு திருப்பியனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாகவும், அவ்வாறு நடைபெற்றால் தாம் சாவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அக்கப்பலில் உள்ள எம் அன்பு உறவுகளில் ஒருவரான திரு.செல்வக்குமார் அவர்கள் தெரிவித்துள்ள நிலையில் அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களினுடையதே.
எமது தாயகத்தில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களேஇக்கடற் கலத்தில் உள்ளதாகவும்,
அதிலும் முக்கியமாக தாயக விடுதலைப்போரில் தம் உயிர்களை தியாகம்செய்தவர்களினதும், காணாமல் போன மற்ரும் சிறைகளிலும் உள்ளவர்களினதுமனைவிமார், குழந்தைகள் உட்பட காயமுற்ற உறவுகளுமே பயனிப்பதாகவும் அக்கப்பலில்உள்ளவர்களோடு தாம் உரையாடியதன் அடிப்படையில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்அறிக்கை வெளியிட்டுள்ளது.அத்தோடு இறுதிவரை மண்னில் தம்மாலான சகல பணிகளையும் செய்த இந்த அன்புஉறவுகளை நாம் இழக்க முடியாது. எமது அடுத்த சந்ததியும் அழிந்துபோக நாம்விடமுடியாது.
இவர்கள் சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் ஏதோ ஒரு வகையில் கொடிய சிங்களஅரசினால் அழிக்கப்படுவார்கள்.எனவே புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளே நீங்கள் தனிநபர்களாகவோ அன்றிநீங்கள் சார்ந்த அமைப்புக்கள் ஊடாகவோ இக்கப்பலில் தவிக்கும் மக்களின் உயிர்களைக்காப்பாற்ற உதவி செய்யுங்கள் என அந்த அறிக்கையில் பிரித்தானியத் தமிழர்ஒன்றியத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment