Translate

Monday, 4 July 2011

பெங்களூரில் இலங்கை தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றம் குறித்த கருத்தரங்கம்

பெங்களூரில் இலங்கை தமிழின அழிப்பு 

மற்றும் போர்குற்றம் குறித்த கருத்தரங்கம்

ஒசூர்: இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலை குறித்த கருத்தரங்கம், பெங்களூர் நகரில் நடைபெற்றது.

இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பு சார்பில் இக் கருத்தரங்கம் பெங்களூரில் மாணவர் கிறிஸ்துவ இயக்க அரங்கத்தில் நடைபெற்றது.



இதில், பெங்களூர் பல்கலைக்கழக பேராசிரியர் பால்நியூமேன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்) , மனித உரிமை ஆர்வலர் நக்ரகரே ரமேஷ், , எழுத்தாளர் ஜி.ராமகிருஷ்ணா, மனித உரிமை ஆர்வலர் ஹரகோபால், எழுத்தாளர் குமார் புருடைகுட்டி, தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெங்கடேசன், மாணவர் காலித்வாசீம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு தமிழ் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் பங்கேற்றன

No comments:

Post a Comment