சர்வதேச போட்டியில் முதன் முறையாக யாழ். வீரர்
இந்திய – இலங்கை அணிகள் மோதும் கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ச.வாகீசன் இடம்பிடித்துள்ளார். சர்வதேசப் போட்டி ஒன்றில் யாழ். வீரர் ஒருவர் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும். இந்த வாரம் புதுடில்லியில் நடைபெறவுள்ள போட்டியில் அறிமுகமாகும் இவர் 2010 ஆம் ஆண்டு இலங்கை அணியில் இடம்பிடித்தவர். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தகாலங்களில் கூடைப்பந்தாட்ட, வலைப்பந்தாட்ட தேசிய அணிகளுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல வீரர்கள் இடம்பிடித்த போதிலும் சர்வதேசப்போட்டிகளில் இம்முறை முதன்முறையாக யாழ். வீரர் ஒருவர் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது................ read more
No comments:
Post a Comment