Translate

Sunday, 3 July 2011

இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம்


இலங்கைக்கு ராணுவப் பயிற்சி: சீமான் கண்டனம்
சென்னை, ஜூலை 2: இந்திய ராணுவ பயிற்சிக் கழகங்களில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதெனும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
 இலங்கை ராணுவத்தின் செயலர் குணதிலகேவுடன், இந்திய ராணுவத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவுக்கான கூடுதல் தலைமை இயக்குநர் ஐ.பி. சிங் நடத்திய பேச்சுவார்த்தையில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பது மனிதாபிமானமற்ற, தமிழர் விரோத நடவடிக்கையாகும் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்................ read more  


No comments:

Post a Comment