தமிழருக்கான அரசியல் தீர்வை இழுத்தடிக்க அரசாங்கம் முயற்சி-மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக தமிழ்மக்களின் அரசியல் தீர்வை அரசாங்கம் இழுத்தடிக்க முயற்சிக்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய தெரிவுக் குழுவோ சர்வ கட்சிக் குழுவோ நிபுணர் குழுவோ அவசியமில்லை என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது.
13 வது திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்க அரசாங்கம் ஏற்கெனவே இந்தியாவிற்கும் ஏனைய சில சர்வதேச நாடுகளுக்கும் வாக்குறுதியளித்துள்ளது. ஆனால் தற்போது நாட்டு மக்களை ஏமாற்ற தெரிவுக்குழு வேஷத்தை அரசு போட்டுள்ளது என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறுகையில், இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் காலம் கடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது........... read more
No comments:
Post a Comment