Translate

Friday 26 August 2011

முடிவேதும் எட்டாது முடிவடைந்த டெல்லி மாநாடு


இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான திரு.சுதர்சன நாச்சியப்பன் அவா்களால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 23, 24 ஆம் திகதிகளில் புதுடில்லியில் இடம் பெற்ற இலங்கை உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மகாநாட்டில் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தீர்மானத்தை எட்டுவதற்கு அதில் கலந்து கொண்டிருந்த அனைத்துக் கட்சிகளும் ஆரம்பத்தில் இணங்கியிருந்தன. எனினும் 24 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் அந்த மகாநட்டு மண்டபத்திற்கு வந்திருந்த திரு சுதர்சன நாச்சியப்பன் அவா்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்மானத்தை வலியுறுத்துங்கள் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதுடன், ஏற்கனவே அங்கு தயாரிக்கப்பட்டு கட்சிகளிடையே இணக்கப்பாடு காணப்பட்டிருந்த அறிக்கையினை பார்வையிட்டு அதில் உள்ள மூன்றாவது பந்தியை மாற்றி எழுதும்படியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.


 அதன் பின்னர் திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான புளொட் மற்றும் த.வி.கூட்டணித் தலைவா் ஆனந்தசங்கரி மற்றும்  ஈஎன்டிஎல்எவ், ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா அணி) , ஆகிய நான்கு தரப்புக்களும் அறிக்கையின் இறுதிப் பந்தியில் சோ்க்கப்பட்டிருந்த சுயநிர்ணய உரிமை என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததுடன் அது நீக்கப்படாவிட்டால் கையொப்பம் இட மாட்டோம் என்று திட்டவட்டமாக மறுத்தனா்.

அத்துடன் தமிழ்தேசம், சுயநிர்ணய உரிமை ஆகிய சொற்களை நீக்கி வேறு ஒரு அறிக்கையை தயாரித்து அதில் கையொப்பமிட வேண்டும் என்று வேற்புறுத்தினர்.

 தமிழ்தேசம், சுயநிர்ணய உரிமை ஆகிய சொற்களை நீக்கி தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பாக சென்றிருந்த அதன் பொதுச் செயலாளா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகிய இருவரும் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தனா்.

இதன் பின்னர் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழ்தேசம் ஆகிய விடயங்களை வலியுறுத்தி தயாரிக்கப்பட்ட அறிக்கையை கூட்டமைப்பிலுள்ள கட்சிகளான தமிழரைசுக் கட்சி, ரெலோ, ஈபிஆா்எல்எவ் மற்றும் காங்கிரஸ் இணைந்து கையொப்பம் இட்டு அனுப்புவோம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் ஆகிகேட்டுக் கொண்டபோதும் அதற்கு கூட்டமைப்பினர் இயங்கவில்லை.
இந்நிலையில் சுயநிர்ணய உரிமை மற்றும் தமிழ்தேசம் ஆகிய விடயங்களை வலியுறுத்தி தயாரிக்கப்பட்டிருந்த அறிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரினால்  கையொப்பம் இடப்பட்டு வெளியிட்டது.

அந்த அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/18103/57//d,article_full.aspx

No comments:

Post a Comment