Translate

Friday 12 August 2011

வன்னியில் ஆஸ்பத்திரிகள் தாக்கப்பட்டது உண்மையே - செஞ்சிலுவைக் குழு அறிக்கை


வன்னியில் இறுதிப் போரின்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைபெற்று வந்த வைத்தியசாலைகளை மீண்டும் மீண்டும் இராணுவத்தினர் இலக்கு வைத்துத் தாக்கினர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித் திருந்த நிலையில், போரின் போது இலங்கையில் மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தற்போது அறிவித்துள்ளது.


புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் பலர் உயிரிழந்தனர் என்று செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான நேரத்தில் வைத்தியசாலையில் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர் என்றும் அது கூறுகின்றது............. read more 

No comments:

Post a Comment