Translate

Sunday, 11 September 2011

நாம் எல்லோரும் தமிழர்கள் தானா ?


நாம் எல்லோரும் தமிழர்கள் தானா ?
சிறீலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. பிரித்தானிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெறப்படும் கையொப்பங்களை வைத்தே இவ்விடையத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என பிரித்தானியா தீர்மானிக்கும் !

http://epetitions.direct.gov.uk/petitions/14586
http://epetitions.direct.gov.uk/petitions/14586
 இதுபோன்ற ஒரு நல்ல சந்தர்ப்பம் தமிழர்களுக்கு கிடைக்காது ! சுமார் 1 லட்சம் கையெழுத்துகள் குறைந்தது தேவைப்படுகிறது. லண்டனில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் வசித்துவருகிறார்கள். அவர்களில் சுமார் 1 லட்சம்பேர் இந்த இணையத்துக்குச் சென்று கையெழுத்து இட்டால் போதும். ஆனால் இது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை ! பிரித்தானிய அரசின் இணையத் தளம் என்பதால் உங்கள் தகவல்களின் இரகசியங்கள் காப்பாற்றப்படும் என்பது ஒருபுறம் இருக்க விசா இல்லாதவர்களும் கூட இதில் கையொப்பம் இடலாம். ஏன் எனில் பிரித்தானியாவில் வசிப்பவராயின் அவர் கையெழுத்துப்போடலாம் என்பதே விதிமுறையாகும்.

போர் குற்ற ஆதாரப் படங்களைப் போட்டு பரபரப்புத் தேடும் இணையங்களும், சுடச்சுட செய்திகளைப் போட்டு தாம் தமிழ் தேசியவாதிகள் என்று கூறும் இணையங்களும் மற்றும் கருத்துக்களங்களை திறந்து வைத்திருக்கும் இணையங்களும் இதுவரை இதனை ஏன் கண்டுகொள்ளவில்லை எனத் தெரியவில்லை. 3 லட்சம் தமிழர்கள் வசிக்கும் பிரித்தானியாவில் தற்போது வெறும் 600 கையெழுத்துகள் மட்டுமே இவ் இணையத்தில் இடப்பட்டுள்ளது. இதனை வேற்றின மக்கள் பார்த்தால் தமிழர்கள் மானம் காற்றில் அல்லவா பறக்கும் ? கொஞ்சமாவது சிந்தியுங்கள் தமிழர்களே. நீங்கள் கையெழுத்து போடுவதோடு உங்களுக்குத் தெரிந்தவர்களையும் ஊக்குவியுங்கள். வேற்றின மக்களையும் ஊக்குவித்து இதில் கையெழுத்துப் போடுமாறு அவர்களுக்கு வேண்டிய தகவல்களைக் கொடுங்கள். மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள்.

பல இணையத்தள உரிமையாளர்களும் இதனைப் பார்ப்பீர்கள். உங்கள் அனைவரது ஆதரவையும் ஏற்பாட்டாளர்கள் நாடி நிற்கின்றனர். எனவே நேரம் தாமதிக்காமல் கையெழுத்துப் போட உதவுங்கள்.

பிரித்தானிய அரசின் இணையம் செல்ல இங்கே சொடுக்குங்கள். (CLICK HERE)



http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=666

No comments:

Post a Comment