ஐக்கிய இராட்சியத்தில் வசிக்கும் மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டமாக 19 குடும்பங்கள் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் மதிப்பளிக்கப்பட்டன.
நேற்றைய தினம் (29-10-2011) வடமேற்கு லண்டன் ஹெயிஸ் பகுதியில் அமைந்துள்ள BROOKSIDE COMMUNITY CENTRE மண்டபத்திலேயே தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரான பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்டர் அவர்களின் தாயார் அவர்கள் ஏற்றிவைத்தார். அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்ரிய ஐக்கிய இராட்சியத்திற்கான மாவீரர் குடும்பங்களுக்கான இணைப்பாளர் திரு.திபா மாவீரர்களின் நினைவுப்பகிர்வை மக்கள் முன் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் திரு.விஜய் அவர்கள் உரையாற்றுகையில் ....
ஈழ விடுதலையின் இலட்சியம் சுமந்து பல வடிவங்களில் படைகள் செய்து பகை மோதி வென்றவர்கள் மாவீரர்கள். மண்ணுக்கு புது முகவரி தந்து விடுதலைக்கு வித்தாகி மண்ணுறங்கும் மாவீரர்கள் தாய்நிலத்தின் காவல் தெய்வங்கள். அவர்கள் வாழும் துயிலுமில்லமே தமிழ்த் தேசியத்தின் ஆலயம். உன்னதமான உயிரைக் கொடுத்து உரிமை கேட்ட உயர்ந்த மனிதர்கள். காலத்தால் அழியா காவியங்களான இந்த மாவீரர்கள் எதிர்கால சந்ததியினர் சுதந்திரமாகவும் கெளரவமாகமும் வாழவேண்டும் என்பதற்காக களமாடி வீழ்ந்தவர்கள். அவர்களின் குடும்பங்களை மதிப்பளிப்பளிப்பதில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் நிறைவும், பேருவகையும் அடைகின்றது என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய போராளி கோபித் அவர்கள் உறுகையில் .....
மாவீரர்கள் மரணத்தை வென்றவர்கள். ஒரு குறித்த இலக்கு நோக்கித் தாக்குதல் என்றால் நான் போகுறேன்... நான் போகிறேன்... என முண்டியடித்து தாக்குதலுக்குச் சென்று வீரச்சாவடைந்தவர்கள் தான் அந்த மாவீரர்கள். இறுதிவரை மண்டியிடாது எதிரியோடு மோதித்தான் வெடித்தார்கள். தமிழீழ விடுதலைப் போரினூடாக புதிய புறனாநூறு எழுதிச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள். பெண் போராளிகளின் வீரத்திற்கு உலகில் எந்தப்பெண்ணூமே ஈடிணையாகாது. அவ்வளவு வீரம் செறிந்த போராட்டம் எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் நடந்துள்ளது. எமது போராட்டத்தை சரியான பாதையில் சரியான முறையி நகர்த்திவந்துள்ளார் எம் தலைவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த ஆயுதப் போராட்டம் இன்று அரசியல் இராஜதந்திரப் போராக சர்வதேச அரங்கிற்கு வந்துள்ளது. தீர்க்க தர்சனம் மிக்க எம் தேசியத் தலைவர் எம் மண்ணின் விடுதலையை எவ்வாறு பெறலாம் என்பதை நன்கு அறிந்தவராக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்று உலகமயமாக்கியுள்ளார். எனவே புலம்பெயர்ன்து வாழும் தமிழீழ உறவுகள் தான் இப் போராட்டத்தை சரியான முறையில் முன்னகர்த்த வேண்டும். குறிப்பாக இளைய சமுதாயம் இத்தருணத்தஇ இறுகப் பற்றி தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். ஒன்றுபட்ட தமிழராய் சர்வதேச ரீதியில் நாம் முன்னெடுக்கும் போராட்டம் தான் எம் இனவிடுதலைக்கு வழிசமைக்கும். அதுவே எம் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் பாலமாக அமையும் என்றார்.
உரைகளைத் தொடர்ந்து மாவீரர் குடும்பங்களுக்கான நினைவுச்சின்னங்களை போராளிகள் வழங்கி கெளரவித்தனர்.
தொடர்ந்து விடுதலை கானங்கள் இசைக்க அனைத்து மாவீரர் குடும்பங்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. இறுதி நிகழ்வாக உறுதியேற்போடு நிகழ்வுகள் இரவு 9:30 மணிக்கு நிறைவடைந்தன.
இந்த நிகழ்வில் 19 மாவீர குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டன. இது போன்று கடந்த 08-10-2011 அன்றும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் லண்டன் புறநகர் பகுதியான மில்றன்கீன்ஸ் பகுதியில் நடைபெற்ற மாவீரர் குடும்பங்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் 23 குடும்பங்கள் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment