யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படைப்புலனாய்வாளர்களது தாக்குதல்கள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நேற்று மாலை பரந்தன்-பூநகரிப்பகுதியில் வைத்த தாக்கப்பட்ட மற்றொரு பல்கலைக்கழக மாணவன் படுகாயமடைந்த நிலையில் இன்று யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளான். பூநகரி நல்லூர் பகுதியை சேர்ந்தவரான ராஜவரோதயன் கவிராஜன்(27 வயது) என்பவரே தாக்கப்பட்டுள்ளார். அவர் யாழ.பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் ஆண்டு மாணவராவார். இவருடன் கூடச்சென்றதாக கூறப்படும் மற்றொரு மாணவன் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். பரந்தன்-பூநகரி வீதியூடாக பயணித்த இவர்களது மோட்டார் சைக்கிளை வழி மறித்த ஆயுததாரிகள் சிலரே கற்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கியுள்ளனர்................ READ MORE
No comments:
Post a Comment