Translate

Tuesday, 25 October 2011

மாவீரர் தினத்தைச் சிதைக்க முயற்சிக்காதீர்கள், வரலாறு என்றுமே உங்களை மன்னிக்காது!

மாவீரர் தினத்தைச் சிதைக்க முயற்சிக்காதீர்கள்வரலாறுஎன்றுமே உங்களை மன்னிக்காது! 

'ஐயோ ஓற்றுமைகயாக வாழுங்கோ!
சிங்களவர் ஒற்றுமையாக நின்று நிலத்தை பறிக்கிறான்மொழியை பறிக்கிறான்சொத்தை பறிக்கிறான்கல்வி கலாச்சரத்தை பறிக்கிறான்தமிழ் பெண்களின்மானத்தை பறிக்கிறான் மானம் கெட்ட தமிழர்கள் சண்டை பிடிப்பதிலும் பிழைகாண்பதிலும் சந்தோசமடைகிறார்கள்
.
மானம் கெட்ட தமிழர்களே விழித்தெழுங்கள்.
ஓன்றிணைந்து ஜனநாயக முறையில் சிங்கள அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க முன்வாருங்கள்.
எமது இனத்தின் ஒற்றுமையை குழப்புபவர்களை இனம் காணுங்கள்
.



தயவு செய்து ஒற்றுமை ஏற்படக் கூடிய வேலை திட்டங்களை முன் வையுங்கள்.' என்ற ஓலக் குரல் ஐரோப்பிய மண்ணிலிருந்து எழுப்பப்பட்டுள்ளதுஇந்த அவலக்குரலுக்குச் சொந்தக்காரர் தமிழ்த் தேசிய தளத்தில் மிகவும் அறியப்பட்டவர்முள்ளிவாய்க்காலின் பின்னரும் முகம் மாறாமல் தமிழீழ விடுதலைக்காகத் தன்னைஅர்ப்பணித்துப் பணி புரிபவர்ஜனநாயக தளத்திலெல்லாம் சிங்கள தேசத்திற்குப் புலிச் சொர்ப்பனமாகச் சீறி வருபவர்.

எம்மைச் சுற்றி என்னதான் நடக்கின்றதுமுள்ளிவாய்க்காலையும் விடக் கொடூரமான உச்சக்கட்டமான சதி வலைக்குள் தமிழினம் வீழ்ந்துவிடுமோஎன்றஅங்கலாய்ப்பில்  தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் இப்படி ஓலமிட்டு அழ மட்டுமே முடிகின்றதுஅவர்களது வலியையும்உணர்வுகளையும் நாம் உதாசீனம்செய்துவிட முடியாது.
முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகள் நடாத்திய யாகமும்தமிழ் மக்கள் செய்த தியகமும் வீண் போகவில்லை என்பதை நிரூபிப்பது போல்சர்வதேச தளங்கள்தமிழ் மக்களுக்கான நியாயங்கள் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளன.நா.வின் நிபுணர் குழு அறிக்கையும்சனல் 4 தொலைக்காட்சியின் 'இலங்கையின் கொலைக்களமும்பேசாத மனிதர்களையெல்லாம் பேச வைக்கின்றதுஇத்தனை கொடூரங்களையும் இரக்கமின்றி நடாத்தி முடித்த சிங்கள தேசத்தைத் தூக்கி நிறுத்தமுடியாமல் இந்தியப் பேயாட்சியும் வெட்கிப்போய் நிற்கின்றதுமுத்துக்குமாரன் மூட்டிய அக்கின வேள்விதமிழகத்தில் சுற்றிச் சுழன்று செங்கொடியையும் வேகவைத்துள்ளதுஎந்தத் திசையிலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நீதி கேட்கும் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
ஆனாலும்இங்கு சில புல்லுருவிகள் புலம்பெயர் தமிழர்களைப் பிளவு படுத்தும் சிங்கள தேசத்தின் தேவையினை நிவர்த்தி செய்யத் துடியாய்த் துடிக்கிறார்கள்.வெட்கம் கெட்டவர்களாக மாவீரர் தினத்தையும் சிதைக்கும் தேசத் துரோகத்தையும் கூசாமல் அரங்கேற்றத் துடிக்கின்றார்கள்தேசியத் தலைவரையுத் தூஷிக்கத்துணிந்து நிற்கிறார்கள்.

'
விடுதலைப் புலிகளுக்குப் பின்னரானதென்றொரு காலம் ஒருபோதும் வராதுஎன்று அரசியல்துறைப் பொறுப்பாளர் திருநடேசன் அவர்கள் உறுதியாகத்தெரிவித்திருந்தார். 'இந்தியா எம்மீது போர் தொடுக்கும்இந்தியா மட்டுமல்லஉலகின் பல நாடுகளும் களமிறங்கும்ஆனாலும்விடுதலைப் புலிகளை அழித்துவிடமுடியாதுஎன்று தேசியத் தலைவர் அவர்கள் எம்மிடம் தெரிவித்தபோதுபுலிச் சொர்ப்பனமாகச் சீறி வருபவர் அவர்களும் உடன் இருந்தார்.
விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது என்ற தேசியத் தலைவர் அவர்களது உறுதியின்மீது இப்போது போர் தொடுக்க சிங்கள தேசம் விரும்பலாம்தமிழர்கள்விரும்பலாமாஅதுவேதான் இன்று தமிழ் நெஞ்சங்களில் இரத்தத்தை உறைய வைக்கின்றது.
தேசியத் தலைவர் அவர்களது தீர்க்கதரிசனம் மீது கேள்விகள் தொடுக்கப்படுகின்றதுஅவரால் உருவாக்கப்பட்டுநெறிப்படுத்தப்பட்ட கட்டமைப்புக்கள்மீதுகுற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகின்றதுவிடுதலைப் போர் நடாத்திய எங்கள் தேசத்து வரலாற்று நாயகர்கள் வெடித்த குண்டுகளுக்கும் கணக்குக் கேட்கப்படுகின்றது.தமது வளமான வாழ்வுக்கு வழிவிடாத வீர மறவர்களது கல்லறைகளை சிங்களம் மட்டுமல்லஇவர்களும்தான் கிளறி அசுத்தப்படுத்துகின்றனர்.
முள்ளிவாய்க்காலில் இழந்தது போதாதாகொடியவர்களேஇப்போதும் ஏன் எங்கள் நெஞ்சங்களைப் பிளக்க முற்படுகின்றீர்கள்மாவீரர் தினம் என்ன சூதாட்டக்கிளப்பாபங்கு போட்டுக்கொள்வதற்குஎங்கள் தேசத்து நாயகர்களை தாயகத்துக் கனவோடு உறங்கவாவது விடுங்களேன்அந்தப் புனிதர்களின்நினைவால் கனத்துக் கிடக்கும் எம் நெஞ்சங்களின் மனச் சுமைகளை இறக்கி வைக்கும் அந்தப் புனிதமான ஒரு நாளையேனும் எமக்காகத் தந்துவிட்டுஒதுங்கி நில்லுங்கள்நாங்கள் அழுவதற்கும்தொழுவதற்கும்அதிலிருந்து மீண்டும் எழுவதற்கும் சிங்களவன் தடுத்து நிற்கின்றான்இங்கே நீங்களா...? வேண்டாம்மாவீரர் தினத்தைச்சிதைக்க முயற்சிக்காதீர்கள்வரலாறு என்றுமே உங்களை மன்னிக்காதுதமிழர்களும் மன்னிக்கமாட்டார்கள்

No comments:

Post a Comment